உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனத்தின் குரல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

சீனத்தின் குரல்


நம்மை நாமே கொல்ல; நம்மிலே பலர் மடிய இனத்தின் உறுதி குலைய அதோ இறக்குமதி செய்யப்படுகின்ற பீரங்கிகள் எதற்காக என்பதையறியாமல் என் சகோதரனை நானே கொல்ல நேர்ந்தது. கொடுமை கொடுமை என்று தங்களைத் தாங்களே தற்கொலை செய்துகொண்டு மாண்ட பல பிரேதங்களை வழி நெடுகக் கண்ட பிறகு, டாக்டர்கள் விஷக்கிருமிகளைக் கொல்லக் கற்றுக்கொள்வதை விட, சீன சமுதாயத்தை அழிக்க அன்றாடம் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கும் வெளிநாட்டு விஷக் கிருமிகளையும், அதன் ஏஜெண்டுகள் ஏன் வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மண்ணில் பிறந்த மடையர்களையும் கொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் என்று மருத்துவ மாணவரிடையே அறிக்கைகள் நடமாடிய பிறகு 'பாட்டாளி மக்களே' படை திரட்டி வாரீர் என்ற கோஷமெழுந்த பிறகு, 'தொழிலாளத் தோழர்களே ! தோள் தட்டி வாரீர்' என்று வான் பிளக்கப் பேரொலி எழுந்த பிறகு, விவசாய மக்களே வீறு கொண்டெழுவீர்' என்ற விண்ணப்பம் விண்ணதிரக் கேட்ட பிறகு, நிலப்பிரபுக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்ட சச்சரவுகள் சரிபார்த்த பிறகு, கொமிங்டாங் கம்யூனிஸ்டு கலந்த கூட்டு சர்க்கார், அமைக்க அவர்கள் செய்து கொண்ட வேண்டாத திருமணம் விலக்கான பிறகு, கொரில்லா படைகளின் கை கோர நடனம் ஓய்ந்த பிறகு, மஞ்சள் சீனம் மடிந்தது தேய்பிறை சந்திரன் போல, செஞ்சீனம் தோன்றியது காலைக் கதிரவன் போல,