உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீனத்தின் குரல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

சீனத்தின் குரல்


ஒரு எதிர்க்கட்சியின் இராணுவ தளகர்த்தர் கீழிருந்துகொண்டே Hunan-ஹனான், Han- Ko ஹாங்கோ , Han-yun-ஹான் -யான், Hongo ஹாங்ஙோ முதலிய மாகாணங்களை கொமிங்டாங் சர்க்காருக்குக் கீழே கொண்டுவந்தனர். அதே போல், சன்-சிவான்-பாங் என்ற மற்றொரு தளகர்க்தரின் கீழிருந்து கொண்டே, கி-யாங்-அ, செகி-யாங், ஹூ-கியான், ஆன்-வெய்-கியாங் முதலிய மாகாணங் சுளையும் பலாத்காரமாகப் பிடித்துக்கொண்டார்.

பாம்பு படம் எடுக்கிறது

1927 மார்ச்சு 15-ம் நாள் நான்கிங் என்ற நகரத்தில் சிறு கலகம் ஒன்று நடக்கின்றது. அதில் படை வீரர்கள் குடிகளிடத்தில் சற்று கடுமையாக நடந்து கொண்டார்கள். இதற்குக் காரணம் கம்யூனிஸ்டுகள்தான் என்று அவர்களைப் பிடித்து சிலரை சிறையிலடைத்து, சிலரைத் தூக்கிலேற்றி இராணுவ சட்டத்தை அமுலாக்கினார், கம்யூனிஸ்டுகளை அடக்க இவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு ஆக்கமளிக்கும் முறையில் சில வியாபாரிகளும் பணக்காரர்களும் முப்பது லட்சம் டாலர்களைச் சேர்த்து ஷேக்குக்குப் பணமுடிப்பாக அளித்தார்கள். இதுவல்லாமல் அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் ஏராளமான பணத்தைக் கடன்வாங்கி, பல பெரிய பெரிய தொழிற்சாலைகள், தபால், தந்தி, ரெயில்வே நிலையங்கள், கல்லூரிகள் முதலானவற்றை நிறுவினார்.