உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இக்குரலை நாமேற்ற, தங்கக் - கட்டிகளைப் பாளத்தை அரசிடத்தே ஈவோம்! நட்டமிதில் சிறிதேனும் நமதில்லை! மாறாய் நாட்டுவளம் பொங்குவதே பெருலாபம் அன்றோ? தொட்டிமுதல் காடுவரை தங்கத்தை வீணே சுமந்ததினால், காத்ததினால் என்னபயன் கண்டோம்? பெட்டகங்கள் திறந்திட்டால்; பெண்மனங்கள் தங்கப் பித்தொழித்தால் பொருள்நுாலில் பொன்னோடு புரளும்!

தாமஸ்ஃபுல் லரெனுமோர் நல்லறிஞன் சொனினான்: தகுபொன்னை உறைகல்லால் இனம்காண்பான்ம னிதன், ஊமைஒளி சிந்துகின்ற அப்பொன்னே அவனின் உண்மை இனத் தரம் காட்டும் உறைகல்லாய் ஆகும்! நாமெலாம் பாரதத்தாய் நற்சேய்கள் ஆனால் நாடொன்றே தெய்வமெனத் துதிப்பவர்கள் என்றால் காமமுறப் பொன்தேடிப் பதுக்கலையே விட்டுக் காலத்தின் தராசுகளில் நாமே பொண் ஆவோம்!