பதியின் கோபம் 55
தலையில் அடிபட்ட நாகம்போல் ரகுபதியின் கோபம் மது படியும் புஸ்' என்று கிளம்பியது. அவன் அலட்சியத்துடன் அவளைப் பார்த்து, 'பேஷாய்ப் போயேண்டி அம்மா நீ இல்லாமல் இந்த உலகம் அஸ்தமித்துவிடப்போகிறதா என்ன? வராம். . ஹாம் . . என்னவோ மிரட்டுகிருயே?' என்ருன்.
'நன்ருக இருக்கிறதடா நீ அவளைப் போகச் சொல்லு றெதும், அவள் புறப்படுகிறதும்! பிறந்தகத்திலிருந்து வந்து தான்்கு மாசங்கள் கூட முழு சாக ஆகவில்லை. அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டுமானல், சண்டை கூச்சலில்லாமல் செளஜன்யமாகப் போகிறதுதான்் அழகு' என்று வேதனை தொனிக்கும் குரலில் கூறினுள் ஸ்வர்ணம்.
ரகுபதி கோபத்துடன் தாயை உறுத்துப் பார்த்துவிட்டு, மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்ருன். சாவித்திரி தன்னை எவ்வளவுதான்் சுட்டுப் பேசினலும், ஸரஸ்வதியின் கபடமற்ற மனம் அதைப் பாராட்டாமல், அவளை எப்படியாவது ஊருக்குப் போகவிடாமல் தடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது. ஆகவே அவள். அத்தை ஸ்வர்ணம் கீழே சென்றபின்பு உரிமை யுடன் சாவித்திரியின் பக்கத்தில் உட்கார்ந்து அவள் தோள் மீது தன் கையை வைத்து, 'சாவித்திரி! அசட்டுத்தனமாக இப்படி யெல்லாம் செய்யாதே அம்மா. அத்தான்ின் மனசு தங்க மானது. தங்கத்தை உருக்கி, எப்படி இழுத்தாலும் வளைவது மாதிரி அவ்ன் மனசை நீ அறிந்து, அதன்படி நடந்து கொண்டால் நன்முக இருக்கும். அத்தையும் பரம சாது' என்ருள்.
கணவனின் அடியால் ' விறு விறு' என்று வலிக்கும் தன் கன்னத்தின் எரிச்சலுடன், ஸரஸ்வதியின் அன்பு மொழிகள் அவளுக்கு ஆறுதலைத் தராமல், மேலும் எரிச்சலே மூட்டின.
(' எல்லோருடைய குணமுத்தான்் தெரிந்துவிட்டதே: இனி மேல் தெரிவதற்கு என்ன இருக்கிறது? யார் வேண்டுமானலும் தங்கமாக இருக்கட்டும். வைரமாக வேண்டுமானலும் இருக் கட்டும்! எனக்கு அதெல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நான் போகத்தான்் வேண்டும்' என்று சாவித்திரி அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டுத் துணிமணிகளை அடுக்கி வைத்துக்கொண் டிருந்தாள். ஸ்ரஸ்வதி முகவாட்டத்துடன் அங்கிருந்து போய்விட்டாள். + - - அன்றிரவு படுக்கை அறைக்குள் வந்த கணவனிடம் வேறெதுவும் பேசாமல், சாவித்திரி, ""நாளை காலே வண்டிக்கு