2 Ο
தை பிறந்தால் வழி பிறக்காதா?
ஏறக்குறைய ஆயிரம் பேர்களுக்குமேல் கூடியிருந்த அந்த மண்டபத்தில் சபைக் கூச்சம் எதுவும் ஏற்படாமல் தங்கம் 'க'ை ரென்று பாடினுள். அவளுக்குத் துனே யாக ஸரஸ்வதியும் மெது வான குரலில் பாடவே அவளுக்கு அச்சம் எதுவும் ஏற்படவில்லை. தந்தப் பதுமைபோல் நின்று அவள் பாடிய அழகே அங்கு வந்திருந்தவர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. ஸ்ரஸ்வதி வருஷக்கணக்கில் சங்கீதம் பயின்றவள். அவள் முதல் கச்சேரியே மிகவும் தரமாக அமைந்துவிட்டது. அன்று அவள்
பாடிய சங்கராபரணமும், தோடியும் வெகு நேரம் வரை எல்லோர் காதுகளிலும் ரீங்காரம் செய்துகொண் டிருந்தன. பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் எங்கும் நிறைந்த
பரப்பிரும்மத்தை நாத ரூபமாக வணங்கிளுள் ஸரஸ்வதி.
ரகுபதிக்கு அன்று, தான்் விழாவில் கலந்துகொண் டிருக்கும் உணர்ச்சியே ஏற்படவில்லை. கான வெள்ளத்தில் எல்லோ ரையும் இழுத்துச் செல்லும் ஸரஸ்வதியும், தன்னடக்கமாக அவன் வார்த்தைக்கு மதிப்பு வைத்து ஒரு நாளைக்குள் சிறிய பாட்டைப் பாடம் செய்து கச்சிதமாகப் பாடிய தங்கமும் மாறி மாறி அவன் அகக் கண்முன்பு தட்டாமாலை ஆடினர். குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்த ஸரஸ்வதியாக அன்று அவள் அவன் கண் களுக்குத் தோன்றவில்லை. ஒரே சமயத்தில் ஆயிரம் நாவுகளின் புகழுக்குப் பாத்திரமாகிவிட்டாள் அல்லவா? அவள் இனிமேல் சாதாரண விஷயங்களில் மனதைச் செலுத்தவும் மாட்டாள். தங்கம் அப்படியில்லை. வாழ்க்கையில் தனக்கு இனியஞக ஒருவன் கிடைக்கமாட்டான என்று ஏங்கி நிற்பவள். பாட்டும், கதை யும் தெரிந்துகொண் டிருந்தாலாவது கல்யாண மார்க்கெட்' டில் விலே பெறுவோமா என்று காத்திருப்பவள். அவளே முன்பாகவேசாவித்திரியைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கு முன்பாகவேபார்த்திருந்தால் தங்கத்தையே மணந்திருக்கலாம்.
'தங்கம்! என் துணிகளைத் துவைத்து வை' என்று உத்தரவு இடலாம். அதை அவள் சிரமேற்கொன்டு செய்து முடிப்பாள். 'தங்கம்; ஏதோ உனக்குத் தெரிந்த பாட்டு இரண்டு பாடு.