உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

நடந்து காெண்டே இரு!



தோளில் உறுத்தும் கடமையின் சுமையைத்
தோல்வியில் ஊறும் கசப்பின் சுமையை
ஆள்பின் ஆளாய் பரிமாறிக் கொள்வோம்!
அடுத்து அடுத்து வெற்றியின் சன்னதி!


இன்ப மகிழ்வதனை எங்கேயோ தேடிநிதம்
துன்பம் அடைகின்ற தோழா கேள்! பொன்புவியில்
வீட்டுக் கதவின் வெளிப்புறத்தில் இல்லையது!
காட்டுகிறேன் உன்னிடமே காண்!


நெய்யும் தறிபோல நெஞ்சமது போராடி
மெய்சோர வேண்டாம் வெறுந்துயரால்.. சோதரனே!
இன்றைக் கொருநாள் இருக்கும் பொழுதேனும்
நன்றாக வாழ்ந்தே நகை


இந்நாள் வருகின்ற எச்செயலும் அப்படியே
தன்னால் நிகழத் தடம்விடுவாய்-முன்னாள்போல்
சென்றே அதைத்திருத்திச் சேர்க்காதே உன்வழியில்
இன்றைக்கு மட்டும் இது