உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்க்சீய அழகியல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

நா.வானமாமலை

திற்குத் தகுதி பெற்றதும், மக்கள் சந்தேகப்படுவார்கள் என்ற ஐயம் இவன் மனத்திலும் புகுந்துகொண்டது. இச்சந்தேகத்தைப் போக்க அக்கினிப் பரீட்சையில் இறங்கக் கோருகிறான். தான் முழுமனத்தோடு நேசித்த மனைவியைத் தீயில் விழச் சொல்லுகிறான். இவ்விரண்டு உணர்வுகளையும், காதல், சக்கிரலர்த்திப் பொறுப்பு இரண்டையும் முன் வைத்துச் சிதை, காதலுக்கே பெரிய மதிப்பு அளிக்கிறாள். காதலித்த மணிதனையே (ராமன்) மேன்மையாகப் போற்றுகிறாள். அவனது இரண்டாவது உணர்விற்கு இணக்கம் காட்டியதால், தான் சிறுமைப்பட்டுப் போனதை எண்ணி மனம் தோகிறாள்.

'இந்தத் தடவையும் இராமன் அக்கினிப் பரீட்சை வைத்தால், தனது கற்பைப் பிறருக்குக் காட்டுவதற்காகச் சோதித்தால், அப்படிக் காட்டுவது அவசியமில்லை; தீக்குளிக்க வேண்டியதில்லை; மனிதனாகத் தன்னைக் காதலித்த இராமன் தன் கற்பைச் சந்தேகிக்கவில்லை; சக்கிரவர்த்திதான் மக்களுக்குத் தன் மனைவியின் கற்பை நிரூபித்துக் காட்ட விரும்புகிறான்; அதற்குத் தான் இணங்கத் தேவையில்லை' என்று குமரன் ஆசானின் சீதை முடிவுக்கு வருகிறாள்.

மரபு வழிப்பட்ட கற்புக் கருத்துக்கு இலக்கணமான சீதை எங்கே? கற்பை, கணவனின் விருப்பப்படி சோதனைக் குள்ளாக்குகிற சீதை எங்கே காதலின் ஆழத்தைச் சந்தேகிக்கிற, மக்களின் சந்தேகத்தைப் போக்கத் தன் மனைவியைத் தீயில் இறங்கச் சொல்லுகிற ஆண்மையின் திமிரை எதிர்த்து நிற்கிற சீதை எங்கே? காதலின் ஆழத்தை மதித்து, பதவியில்லாதிருந்தபோது தன்னைக் காதலித்த ராமனை நேசிக்கிற சிதை, இப்போது பதவி வாய்ந்திருக்கும்போது மனித உறவுகளை சோதனைக்குள்ளாக்கத் தயங்காத ராமனது விருப்பத்தை நிறைவேற்ற மறுப்பதே தனது சுயகெளரவத்திற்கு ஏற்றது என்ற உறுதியான முடிவுக்கு வருகிறாள். கற்புக்கரசியான சீதை சிந்தனையில்லாதவள். துன்பத்தால் புடம் போடப்பட்ட தாயான சீதையோ 'சிந்தா விஷ்டயாய சீதை'. இந்த மரபு மாற்றத்தை எவ்வளவு அற்புதமாகக் குமரன் ஆசான் செய்து காட்டியுள்ளார்.

படிமங்களின் இயல்பு மாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன? வரலாற்றுப்போக்கில் சமூக மாற்றங்கள் நிகழும்போது, சிந்தனை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சமூக மாற்றங்கன், சமூகப் புரட்சி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு முன்பாக நிகழ்ந்து, நிகழ்ச்சிக்குப் பின்னர் சிந்தனை மாற்றம் பெரு வெள்ளம் போலச் சமூகம் முழுவதையும் தன்னுள் ஆழ்த்திவிடலாம். ஆனால் இந்நிகழ்ச்சிகள் எதுவும் தற்செயலானவுை அல்ல,