பக்கம்:ராஜாம்பாள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஷன்ஸ் கோர்ட்டு | 75

வீற்றிருந்த நடேச சாஸ்திரிகளும் லோகசுந்தரியும் இது கனவோ அல்லது நினைவோ என்று சந்தேகித்து ஒருவரை ஒருவர் கேட்டுக் கனவுமல்ல, நினேவுமல்லவென்றும், வாஸ்தவமாகவே ராஜாம்பாள்தான் உயிருடன் வந்து விட்டாளென்றும் அறிந்தவுடனே எழுந்து வெளியே போகப் புறப்பட்டார்கள்.

உடுப்புப் போடாத இரண்டு போலீஸ்காரர் கேஸ் முடிகிறவரையில் அவர்களைக் கோர்ட்டைவிட்டு வெளியே போகாதபடி பார்த்துக்கொள்ளும்படி நியாயாதிபதி உத் தரவு செய்திருப்பதாகச் சொன்னர்கள். நடேச சாஸ்திரி. கள் அப்பேர்ப்பட்ட உத்தரவைக் காண்பித்தாலொழியத். தாங்கள் வெளியே போவதாகவும், அவர்களைப் போகக் கூடாதென்று தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையா தென்றும் சொன்னர். அவர்களுடைய வார்த்தையை மீறிப் போவதாயிருந்தால் இருவருக்கும் உடனே விலங்கு கள் மாட்டிப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோக உத்தரவாயிருக்கிறதென்று போலீஸ்காரர் சொன்ன வுடனே ஒன்றும் பேசாமல் இருவரும் அவரவர்களிடத்தில் உட்கார்ந்தார்கள்.

துரைசாமி ஐயங்கார் : ராஜாம்பாள் ஜனவரிமீ 26வ. ராத் திரி நடந்த சமாசாரங்களைச் சொல்லு.

இராஜாம்பாள்: அன்று ராத்திரி பத்து மணிக்கு என் தகப்பனருக்கு ஒரு காகிதம் எழுதி அவர் மேஜையின் மேல் வைத்துவிட்டு ராத்திரிப் பன்னிரண்டு மணிக்குக் கோபாலனைச் சந்திப்பதற்காக உலகளந்த பெருமாள் கோவில் தெரு, 25-வது நெம்பர் வீட்டிற்குச் சென்றேன். அங்கே போய்ப் பார்க்கையில் கோபாலனைக் காணுேம். வேறே யாரோ ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் என் னேக் கண்டவுடனே எழுந்து ஓடி வந்து என் கைகள் இரண்டையும் பலமாய்ப் பிடித்துக்கொண்டு அவரைக் கல்யாணஞ் செய்துகொள்ளச் சொல்லி வேண்டிக்கொண் டார். கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் கோபாலனேத் தவிர வேறு ஒருவரையும் கல்யாணஞ் செய்துகொள்ள மாட்டேனென்றும் அதைவிடப் பிரா ணனையாவது இழந்துவிடுவேனென்றும் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டேன். அவர் பல வகையில் என்னை வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/179&oldid=684721" இலிருந்து மீள்விக்கப்பட்டது