பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 விந்தன்

சாவதையும் ஏனோ விரும்ப வில்லை, நான்! எனவே, ‘என்னுடையத் தற்கொலைக்கு வேறு யாரும் காரணமல்ல; நானேதான் காரணம் என்று முன்கூட்டியே ஒரு கடிதம் எழுதி என்னுடைய இடுப்பில் செருகிக்கொண்டு, கூடுமானவரை உருத்தெரியாமல் சாகவேண்டும் என்பதற்காகவே இருப்புப் பாதையைத் தஞ்சமடைந்தேன். அப்போதுதான் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்; என்னைக் காப்பாற்றுவதற்காக உங்கள் காலையும் ஒடித்துக் கொண்டுவிட்டீர்கள்

> <> <>

மேற்கண்டவாறு நறுமணம் தன்னுடைய கதையைச் சொல் லி மு டித்தது ம் சந் தோஷ ப் படு கிறேன் அம்மா.சந்தோஷப்படுகிறேன்’ என்றான் கிழவன்.

‘சந்தோஷப்படுகிறேன் என்று சொல்லாதே தாத்தா, அது வடமொழி: ‘மகிழ்ச்சியடைகிறேன் என்று தூய தமிழில் சொல்லு'என்றாள் தாழம்பூ, தறுதலையைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே.

‘யு ஆர் ரைட், யு ஆர் ரைட்!” என்றார் தறுதலையார். “வாழ்க்கையில் இல்லாத தூய்மை மொழியிலாவது இருக்கட்டுமே என்று நினைக்கிறாரோ, உன் அத்தான்? காவாலிப்பயல்கள், காவாலிப்பயல்கள்!’ என்றான் கிழவன்.

‘அது சரி, தாத்தா என்னுடைய கதையில் நீங்கள் என்ன மகிழ்ச்சியைக் கண்டீர்கள்?’ என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் நறுமணம்.

‘உன்னுடைய கதையில் நான் மகிழ்ச்சியைக் காணவில்லை, அம்மா! ஏதோ ஒரு வெறி நாய் உன்னை - ஏன், உங்கள் குடும்பத்தையே நாசமாக்கி விட்டது பார்,