4
தன் வாழ்நாள் முழுவதும்—குருவின் ஆணைப்படி நடப்பதையே தன் வாழ்வின் லக்ஷியமாகக் கொண்டு வாழ்கிறான்.
இந்த நாவலை எழுதியுள்ள நீலமணி, கும்பகோணம் பிடில் ராஜமாணிக்கம் பிள்ளை அவர்களிடமும், திருவாளப்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளையவர்களிடமும் முறையாக வயலின் கற்றுத் தேர்ந்தவர். ஆயினும், இசையைத் தொழிலாகக் கொள்ளாமல், தினமணியில் ஆசிரியர் குழாமில் பணியாற்றி வருகிறார். இசையிலும், இலக்கியத்திலும் இவருக்குள்ள ஆர்வத்தை இந்த நாவலில் காண முடிகிறது.
எளிய தமிழில், சரளமான நடையில் ஆசிரியர் இந்நாவலை எழுதியுள்ளார். இவரது இந்த நாவலைப் படிப்பதற்கு எடுத்தேன். மிக சுகமாக இருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
தலை சிறந்த சங்கீத வித்வான் ஒருவருடைய இசை வாழ்வையும்; அவரது குடும்ப வாழ்வையும்; நிலைக் களமாகக் கொண்டு; ஒரு அருமையான நாவலைப் பின்னி; மிகச் சிறந்த சங்கீதக் கச்சேரியொன்றைக் கேட்டது போன்ற மன நிறைவை உண்டாக்கி விட்டார் ஆசிரியர்.
இவர் இது போன்று, இன்னும் பல சிறந்த நூல்களைப் படைத்து பெயரும், புகழும் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
லாயிட்ஸ் லேன், ராயப்பேட்டை, |
சென்னை - 600014. |