பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புல்லின் இதழ்கள்

தலையில் கட்டித் தன்னுடனேயே தொழிலுக்குத் துணை யாக வைத்துக் கொண்டான்.

வயது ஜம்பதுக்கு மேலாகியும் பெரியசாமிக்குக் ‘கியாஸ் லைட்’ தூக்கும் உத்தியோகந்தான். கல்யாணம், ஊர்வலம், உற்சவங்கள் பொதுக் கூட்டங்கள் முதலிய அனைத்துக்கும் அவ்வூரில் அவன்தான் ஒளிபரப்பும் உத்தியோகஸ்தன்: அதாவது அந்த ஊரிலேயே எம். ஜி. எல் (மாயாண்டி கியாஸ் லைட்) கம்பெனிதான் பெரிய லைட் கம்பெனி. அதிவ் பணி புரியும் இருபது முப்பது வாடகை விளக்குகள் பெரியசாமியின் தலைமையில்தான் செல்லும்,

அந்தக் கம்பெனி உரிமையாளர் மாயாண்டிக்கு பெரியசாமியிடம் அன்பு உண்டு. அவன் அந்தக் கடைக்கு வந்த பிறகுதான் நாலு விளக்குகளுடன் ஆரம்பித்த தன் தொழில் இத்தனை பெரியதாக வளர்ந்தது என்பது மாயாண்டியின் நம்பிக்கை. அதனால் அவனுக்குப் பெரிய சாமியிடம் ஒரு பிடிப்பு, பிரியம்; அதனால் அவனுடைய பிள்ளை கண்ணப்பனையும் வேலைக்கு எடுத்துக்கொண்டு சம்பளமும் போட்டுக் கொடுத்தான். அதில் பெரியசாமிக்கு உள்ளுற மகிழ்ச்சி.

கண்ணப்பனுக்கு நாளடைவில் அந்த வேலை பிடித்துப் போய்விட்டது. திருமணம், கோயில் உற்சவம் முதலிய ஊர்வலங்களுக்கெல்லாம் பேபி பெட்ரோமாக்ஸை மகன் கையில் கொடுத்துத் தன்னுடனேயே வைத்துக்கொண் டிருந்தான் பெரியசாமி. அப்போது கண்ணப்பனின் கவன மெல்லாம், ஊர்வலத்தில் கச்சேரி பண்ணும் நாகசுர வித்துவானின் இசையிலேயே இருக்கும். அவன் சிந்தை அதிலேயே சென்று லயித்துவிடும். தன் தலையில் இருக்கும் பெட்ரோமாக்ஸின் பாரங்கூட அவனுக்குப் பெரிதாகத் தோன்றாது.

இப்படியே நாளடைவில் பெரிய பெரிய திருமண ஊர் வலங்களிலும், கோயில் சுவாமி புறப்பாடுகளிலும் கண்ணப்