முடிப்புரை இன்னும் எத்தனையோ கதைகள் விநாயகரைப் பற்றி, ஒரு போட்டிப் பந்தயத்தில் அவர் வெற்றி பெற்ற கதையை மட்டும் கடைசியாகச் சொல்லி விடுகிறேன். ஒருந்ாள் பார்வதியும் பரமேஸ்வரனும் கைலாயத்தில் இருக்கும் போது கலகப்பிரியரான நாரதர் ஒரு நல்ல மாங்கனி ஒன்றைக் கொண்டு வந்து இறைவனிடம் கொடுக்கிறார். வாங்கிய கனியை அன்னையிடம் அளிக்கிறார் அவர் கனி பெற்ற தந்தையும், தாயும், குழநதைகளை நினைக்கின்றனர், எல்லோரும் பகிர்ந்து உண்ணலாம்ே என்று. பிள்ளைகள் இருவரும் ஆம், பிள்ளையாரும் முருகனுந்தான் வந்து சேருகின்றனர். - - பிள்ளைகளைக் கண்டதும் சிவபெருமானுக்கு ஒரு விளையாட்டுப் போட்டி நடத்தலாமே என்று தோன்றுகிறது. உடனே, கனியைக் காட்டி, உங்களுக்குள் ஒரு பந்தயம். யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறார்களோ அவர்கள்தான் இக்கனியைப் பெறுவார்கள் என்கின்றார். முருகன் நினைக்கிறான், அண்ணன் மூஷிக வாகனத்தில் ஏறி அவனியைச் சுற்றிவருவதற்குள்ளே நாம் மயில் வாகனத்தில் மாநிலம் சுற்றிவந்து விடலாமே. என்று. உடனே மயில்மேல் ஏறி உலகம் சுற்றப் புறப்பட்டு விடுகிறான். அமுத்தலாக இருக்கிறார் பிள்ளையார். சாவதானமாக அன்னையையும் அத்தனையையும் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றுகிறார். மாங்கனிக்கு கையை நீட்டுகிறார். என்னடா? என்றால், உலகம் தோன்றி நின்று ஒடுங்குவது உங்களிடம்தானே, ஆதலால் உங்களைச் சுற்றிவிட்டால் உலகத்தையே சுற்றி விட்டதாகாதோ? என்று எதிர்க் கேள்வி போடுகிறார் பிள்ளையார். அவ்வளவுதான் பந்தயத்தில் வெற்றி பெற்று - மாங்கனியையும் பெற்றுக் கொள்கிறார். சுற்றி அலுத்த முருகனோ, விஷயம் அறிந்து தந்தை தாயாரிடம் கோபித்துக் கொண்டு கோவாணாண்டியாகவே புறப்பட்டு விடுகிறான். தாய்தான் அப்பா நீயே ஞானப்பழமாக இருக்கும்போது, உனக்கு வேறு பழம் நாங்கள் தரவேண்டுமா என்று சமாதானம் செய்து வைக்கிறார். 'முப்பழம் நுகரும் மூஷிகவாகனர் மாம்பழம் பெற்ற கதை இதுதான். அண்ணன் தம்பி போட்டியில், ஆத்திரம் அடைந்த தம்பி தோல்வியுறுவதையும், அவசரப்படாத அண்ணன் வெற்றி பெறுவதையும் காண்கின்றோம். ஆற்றல் இல்லாவிட்டாலும், அறிவாலும் அனுபவத்தாலும் காரியசித்தி பெறலாம் போட்டியில் வெற்றி பெறலாம். என்பதைத்தானே விளக்குகிறது. கதை, -
பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/42
Appearance