உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 1 27 'உலகுக்கெல்லாம் சொந்தமானவர் “ஐகத்குரு பூரீ காஞ்சி காமகோடி பீடாதீச்வர பூரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராசாரிய ஸ்வாமிகள் பிள்ளையார் ஏழை எளியவர்களுக்கெல்லாம் சொந்தமான ஸ்வாமி. மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணியிலும் கூட எவரும் ஒரு பிள்ளையாரைப் பிடித்துப் பூஜை செய்துவிடலாம். அவர் எளிதில் ஸ்ந்தோஷப்படுகிறவர். எங்கே, எப்படி, எதில் கூப்பிட்டாலும் உடனே வந்து அந்தக் கல்லோ, களிமண்ணோ, அதற்குள்ளிலிருந்து கொண்டு அருள் செய்வார். அவரை வழிபட நிறைய சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை. ஒன்றும் படிக்காதவனுக்கும், அவன் கூப்பிட்ட குரலுக்கு வந்துவிடுவார். மற்ற தேவதா விக்கிரஹங்களில் ஸாங்கோபாங்கமாகப் பிராணப் பிரதிஷ்டை என்று பண்ணி, அவற்றில் அந்தந்த தேவதைகளில் ஜீவ கலையை உண்டாக்குவது போல் பிள்ளையாருக்குப் பண்ண வேண்டுமென்பதில்லை. பாவித்த மாத்திரத்தில் எந்த மூர்த்தியிலும் அவர் வந்து விடுகிறார் என்று சொல்வதுண்டு. மற்ற ஸ்வாமிகளைத் தரிசனம் செய்வது என்றால், நாம் அதற்காக ஒரு காலம் பார்த்து, குளித்து முழுகி, அர்ச்சனை சாமான்கள் வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போக வேண்டியிருக்கிறது. கோயிலுக்குப் போனாலும் நேரே அந்த ஸ்வாமியிடம் போய்விட முடியாது. பிரகாரம் சுற்றிக் கொண்டு உள்ளே போக வேண்டும். அப்போதும் கூட ஸ்வாமிக்கு ரொம்பப் பக்கத்தில் போகக்கூடாது. கொஞ்சம் தள்ளித்தான் நிற்க வேண்டும். பிள்ளையார் இப்படி இல்லை. எந்த சமயமானாலும் சரி, நாம் ஆபீஸுக்கோ, ஸ்கூலுக்கோ, கடைக்கோ போய் வருகிறபோதுகூட, தெருவிலே தற்செயலாகத் தலையைத் தூக்கினால், அங்கே ஒரு முக்கில் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் நாமாக நெற்றியில் குட்டிக் கொண்டு ஒரு தோப்புக்கரணம் போட்டுவிட்டு நடையைக் கட்டுகிறோம். இதிலேயே நமக்குச் சொல்லத் தெரியாத ஒரு நிம்மதி, ஸ்ந்தோஷம் உண்டாகிறது. - அவருக்கு கோயில் என்று இருப்பதே ஒர் அறைதான். அதனால் ஒரு பேதமும் இல்லாமல் யாரும் கிட்டே போய்த் தரிசிக்க முடிகிறது