11
போது வானம் பெரிதாக இருண்டு மழைவரும் போல் இருந்தது.
மாடசாமி, பத்ரகாளியின் கதையை உணர்ச்சி வசப்பட்டுக் கூறிக் கொண்டிருந்தபோது, வானம் 'சடசட' வென்று சப்தமெழுப்பிக் கொண்டு 'சோ' வென்று பெருமழை கொட்டத் துவங்கியது.
இடியும், மின்னலும் மாறிமாறிப் பளிச்சிட்டன. எல்லோரும் மண்டபத்தின் ஒரு மூலையில் ஒதுங்கிக் கொண்டனர். மழைநீர் சிற்றோடை போல், மண்டபத்தைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது.
பயத்தில் மாடசாமி பத்ரகாளியின் கதையைப் பாதியில் நிறுத்தி விட்டான். அப்போது 'பளிர்' என்று ஒரு மின்னல் கண்ணைப் பறிப்பது போல் பிரகாசித்துக் கொண்டு பூமியை நோக்கி இறங்குவது போலிருந்தது.
மறுநிமிஷம்-
அமலாபுரத்துச் சிறுவர்கள் இருந்த மண்டபத்தின் மத்தியில்; அழகே உருவான ஐந்து சிறுவர்கள் வந்து நின்றார்கள்.
தலையில் கிரீடமும்; தங்கத்தை உருக்கி வார்த்தாற் போன்று பளபளக்கும் உடைகளையும் கோண்டிருந்த அவர்கள் பார்ப்பதற்கு அரச குமாரர்கள் போல் கம்பீரமாக இருந்தனர். அவர்