உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

கொண்டனர். அப்போது அழகப்பள் அவர்களை நோக்கி, "நீங்கள் யார் என்று இன்னும் சொல்ல வில்லையே? உங்களைப் போலவே-நானும், எனது இந்த நண்பர்களும்கூட உங்களுடன் நட்புக் கொள்ள மிகவும் ஆசைப்படுகிறோம்? நீங்கள் யாரென்று நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?" என்று அன்புடன் கேட்டான்.

உடனே அந்தப் புதியவர்களில் ஒருவன், "நண்பர்களே, நாங்கள் உங்களைப் போல இந்தப் பாரத மண்ணில் பிறக்கும் பாக்கியம் பெற்றவர்கள் அல்ல. விண்ணுலக வாசிகள், என் பெயர் உலகநாதன் இந்த பூமண்டலத்தைப் படைத்து ஆட்சி புரியும் பிரமனின் முழுப்பொறுப்பையும் ஏற்கும் பூமித்தாயின் மகன் நான்.

இதோ என் அருகில் இருக்கும் சகோதரனின் பெயர் கங்காதரன். வருண தேவனுடைய குமாரன். மூன்றாவன் பெயர் அக்கினி புத்திரன். அக்கினி தேவனின் திருக்குமாரன், நான்காமவன் பெயர் தென்றலழகன். வாயு தேவனின் மகன். ஐந்தாவது சகோதரனின் பெயர் மேகநாதன். ஆகாயத்திற்கு அதிபதியான மகாவிஷ்ணுவின் மைந்தன். இதுதான் எங்கள் ஐந்து பேருடைய பெயர்களும், பெற்றோரின் வரலாறுகளும்” என்று கூறினான்.

உடனே கூடியிருந்த சிறுவர்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க "அப்படியானால் நீங்கள்