உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13

மகாத்மா காந்தி. அப்போதைய காங்கிரஸ் இதை ஏற்றதா ? இல்லை. எனவே காந்திஜி என்ன செய்தார் ?

சத்தியாக்கிரக சபை

சத்தியாக்கிரக சபையைத் தொடங்கினார். ரெளலட் சட்டத்தை எதிர்ப்பவர் - அதாவது எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்ய முன் வருபவர்களை எல்லாம் ஒனறு சேர்த்தார்

காந்திஜி.

இவர்கள் என்ன செய்வார்கள் ? குறிப்பிட்டதொரு தினத்திலே இந்திய மக்கள் தங்கள் உணர்ச்சிகளைத் தெரிவிப்பார்கள். எப்படி? ஹர்த்தால், ஹர்த்தால் கடையடைப்பு - வேலை நிறுத்தம் என இப்படி.

இதற்கென ஒரு நாளும் குறிப்பிடப்பட்டது. 1919-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி இந்தியா முழுவதும் ரெளலட் சட்ட எதிர்ப்பு நாள் என தீர்மானிக்கப்பட்டது.

ஆறாம் அத்தியாயம்

பெரிய நேருவும் இளைய நேருவும்

தென் ஆப்பிரிக்காவிலே காந்தி செய்த அரும் பெரும் செயல்களை இந்திய மக்கள் நன்கு அறிந்திருந்தனர், உடனே செயலில் ஈடுபட துடித்துக் கொண்டிருந்த இளைஞர் உலகம் காந்தியை எதிர்நோக்கி நின்றது. காந்தியின் சத்தியாக்கிரக சபா அவர்களை காந்தம் போல் ஈர்த்தது. ஜவஹரும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரது இளம் உள்ளமும் சத்தியாக்கிரக சபாவையே நாடியது.