உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


தாயில்லாப் பிள்ளையைப்போல்
        தமிழிருக்க, வருமிந்தி
                தட்டிக் கேட்க
நீயில்லை என்கின்ற
        நினைப்பென்னில் வரும்போது
                கொதிக்கும் நெஞ்சம்! 10

கடையேழு பெருவள்ளல்
        வாழ்ந்திருந்த காலத்தைக்
                கருதும் போது
நடையினிலே முறுக்கேறும்;
        நற்றோளில் வலிவேறும்!
                தமிழ்த்தாய் அன்றோ
அடைந்திருந்த பெருஞ்சிறப்பும்,
        இன்றுள்ள அவள்வாழ்வும்
                எண்ணி யெண்ணி
இடையில்லாப் பெண்மக்கள்
        எள்ளாமுன் எழுந்தோடித்
                தமிழ்காப் போமே! 11

நாள்: 27—10—1957

இடம்: காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரிக் கலைவிழா.

தலைவர்: திருப்பெருந்திரு குன்றக்குடி அடிகளார்.

தலைப்பு: எட்டுத் தமிழ் வள்ளல்—மலையமான் திருமுடிக்காரி.

1. இரவலர்-யாசிப்பவர்; இரவு+அலர்-இரவில் அலர்கின்ற அல்லிப்பூ.

2. அல்லிக்கு-இரவில் அலர்கின்ற அல்லிப்பூவுக்கு.