124
வருமானம் மிகக்குறைவு! குடியிருக்க இங்கே
மனையுண்டா? உடையுண்டா? வளப்பந்தா னுண்டா?
தெருமானம் போகு தந்தோ பலபிள்ளை பெற்றுச்!
சிறார்களின் நல் லுடல் வளந்தான் சீர்ப்பட்ட துண்டோ?
உருமானம் தாய்க்குத்தான் உருப்பட்ட துண்டோ?
ஒவ்வொருநாளுந் தொல்லை பலபிள்ளை பெற்றால்!
கருமானும் வழியடைப்போம்! கவலையில்லை வாழ்வில்!
களிபொங்கும் சிற்றில்லில்! கவலையில்லை. வாழ்வே!
சூல் நிறைய வேம்பரசைச் சுற்றிவந்து வீட்டில்
துவளிடையை மணிவயிற்றைத் தடவிவந்த பெண்கள்
சூல் நிறையப் பெறுகின்ற வேளையிலே, அந்தோ!
சொல்லாமல் படுந்துயரம் சொல்லுதற்குப் போமோ!
பால் நிறையப் பெறுகின் ற தாய்மாரே! என்னைப்
பகைக்காதீர்! பலகுழந்தை எந்நாளும் வேண்டாம்!
கோல் நிறையும் மன்னவனும் பலகுழந்தை பெற்றுக்
குடிமுழுகிப் போன கதை நாடறிந்த உண்மை!
தாய்மாரே! உங்களைத்தான் கேட்கின்றேன் என்றும்
தன்வயிற்றில் சுமந்துபெற்றுத் தருபவரோ ஆண்கள்!
காய்தாங்காக் கொடியுண்டோ எனச்சொல்லி உங்கள்
கருத்தழிப்பார்! அவர்பேச்சைக் காதிற்கேட் காதீர்!
வேய்போல, வாழையைப் போல், நண்டுசிப்பி போல
மெலிந்து நொந்து சாவாதீர்! பிள்ளை பல வேண்டாம்!
காய்நிலவு போல்வாழ்வீர் கருத்தடையைக் கொள்வீர்!
கவலையில்லை வாழ்க்கையிலே! களித்திருப்பீர் நன்றே!
உடுப்புக்குப் பஞ்சமில்லை ஒன்றிரண்டு பெற்றால்!
உணவுக்குப் பஞ்சமில்லை ஒன்றிரண்டு பெற்றால்!
படிப்புக்குப் பஞ்சமில்லை ஒன் றிரண்டு பெற்றால்!