உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பெற்று வளர்த்துப் பேணிய தமிழக
வெற்றி முரசவன்! வீரர்வாய்ச் சங்கம்!

படிக்கப் படிக்கப் பண்பை விளக்கும்
அடிதளை சீரொடு அணிநிறை காவியம்!

மொழிமுதல் ஆசான்! மூண்ட புரட்சி
வழிமுதல் ஆசான்! வாழ்நாள் முழுதும்

இயலிசை கூத்தை இலைமறை காயாம்
மயல் நிறை இலக்கண மாண்பை விளக்கிப்

பின் தன் பரம்பரை பேணி வளர்த்த
என்கவித் தந்தை; எழுச்சிப் பாவலன்;

இன்றிலை! நெஞ்சில் எரிபுகுந் ததுவே!
இன்றிந் நாட்டில் இருக்கும் மக்கள்

நெஞ்சில் நிலைத்து நினைவில் சிரித்துச்
செஞ்சொற் பாடிச் சிறக்கின் றனனே!

நன்றி


எண்மூன்றும் இரண்டும் சேர்ந்த
       கவிஞர்கள் இனிய செந்தேன்
பண்கூட்டி இசைத்தார்; கேட்டோம்;
       பால்பழம் சுவைத்தோம்! நன்றி!
விண் கூட்டும் பரிதி போல
       மேன்மேலும் கவிதை பாடி
மண்கூட்டும் புகழைத் தேக்கி
வாழ்கபல் லாண்டு நீடே!
       என்பாட்டைக், கவிஞர் ஐவர்
இசைத்திட்ட பாட்டை யெல்லாம்
       முன்கேட்ட புதுவை மூதூர்

அறிஞர்காள் முடிவில் என்றன்