உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21. மகிழ்ச்சி பொங்கும் வீடே!
(எண்சீர் விருத்தம்)

‘விண்பூத்த பிள்ளை மதி அழகொழுகும் நெற்றி!
       விரிகடலின் கரைமோதும் அலைக்கூட்டம் கூந்தல்!
கண்பூத்த கழிநீலம்! வாய் நிறைந்த பற்கள்
       கார்பூத்தவெண்முல்லைப் பேரரும்பு! செஞ்சொல்
பண்பூத்த மெல்யாழாம்!’ எனப்போற்றும் ஆளன்
       பலகுழந்தை பெற்றவுடன் மனைவெறுக்கக் கண்டோம்!
புண்பூத்த உள்ளத்திற் பூத்திடுமோ இன்பம்? வீடே!
       புகும் கருவின் வழியடைப்போம்! மகிழ்ச்சி பொங்கும்

தாலாட்டு, செங்கீரை, சப்பாணி என்ற
       தளிர் குழுவிப் பருவலின்பம் இருகுழந்தை நல்கும்!
வாலாட்டு நாய்போலப் பலகுழந்தை பெற்றால்
       வறுமையின்றி நோயின்றி என்னடையும் வீடு?
காலாட்டும் போழ்தெல்லாம் மனக்கவவை தோன்றும்!
       கருத்தோன்றும் வழியடைப்போம்! இதிலென்ன
கோலாட்டுஞ் சிறுவர்கள் ஓரிருவர் போதும்! குற்றம்?
       குடிவாழும்; குலம்வாழும்! மகிழ்ச்சி பொங்கும் வீடே

பானையைப் போல் வயிறுண்டு, வாழ்க்கைவள மில்லை!
       பண்படுத்தல் நம்கடனே! இதிலென்ன குற்றம்?
பூனையைப் போல், ஈசலைப்போல் குழந்தைகளைப் பெற்றால்
       பொருளேது? வாழ்வேது? பொங்குகடல் நீர்வாழ்
மீனைப்போல் மீன் நிலவு ஒன்றென்றே சொல்லி
       வெண்ணிலவை யார் வெறுப்பார்? மனைமாட்சி ஓங்க
யானையைப்போல் ஒருமகவு போதும்;அது போதும்!

       யாமறிந்த சிறந்தவழி மகிழ்ச்சிபொங்கும் வீடே!