உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

வாழ்க இளம்பரிதி! வாழ்கவே தைப்பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! உளம் பொங்கும் இந்நாள் போல்
எங்கும் தமிழ்மக்கள் எந்நாளும் வாழ்க!
உயர்க பல்துறையில்! இன்பம் உயர்க!
அயர்விலும் நாட்டின் உயர்வே நினைக!
அறமும் திருவும் அறிவும் நிறைந்திடுக!
சீர்பெற்றுக் கன்னித் தமிழ்வாழ்க என்றும்!

திருநாடு வாழ்க சிறந்து!


நாள்: 14–1–1952
இடம் : திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்.
தலைவர்: சர் ஆர். கே. சண்முகஞ் செட்டியார்.
தலைப்பு: பொங்கல் விழா—வாழ்க இளம்பரிதி.