44
கிறதே! (பார்த்து) கற்பனை மிக நன்று, சங்கா இதனைப் பார். பார்த்து மதிப்பிட்டு உனது கருத்தினைக் கூறுக.
(மன்னன் கொடுக்க, மகாராணி பெறு
கிறார், உற்றுப் பார்க்கிரும்.)
சந்தி : அண்ணு மைத்ரேயன் ஒவிய மன்னன், வல்லவன் ஆக்கிய சித்திரம் இது. நீங்களே மதிப்பிட வேண்டும், ஒளி மிகுந்த முத்துக்கள் மன்னரின் மணி முடியைத்தானே அலங்கரிக்கவேண்டும்?
கந்தி:- தம்பி! இவர் உனது அன்புக்குரிய நண்ப ரென்று கருதுகின்றேன். மெய்தானே?
சந்தி:- இல்லை ! உம்..... ஆமாம் ஒருவகையில் தெரிந்தவர் !
சங்கா :- மன்னர்பெரும ஒவியம் பற்றிய எனது
கருத்தை ஒளியாது சொல்லட்டுமா? தவறு இருந்தால்...
கந்தி - கலைஞர் திருந்துகிறார். கலைத்துறையிலே தேர்ந்தவள் நீ ! உன் மதிப்பீடுதான் பொருத்தமாயிருக் கும். கூறு சங்கா விமர்சனம் கலைகளை வளர்க்கததானே?
சங்கா : பொதுத் தோற்றத்திலே ஒவியம் குற்ற மற்றது. இசையையும், நடனத்தையும் இணைத்திடும். கருத்து பாராட்டத்தக்கது ஆணுல், கலை நுணுக்கங்கள், கற்பனைத்திறன், பிரத்தியட்ச வருணனை மிகக் குறைவு ! இதிலே குறிப்பிடத் தக்கது வீணை, இது தமிழ் நாட்டுக் குரியதல்ல. வடநாட்டுப் பாணியிலே உள்ளது. இதைத் தீட்டியவர் நிச்சயமாக வெளி நாட்டாராகவே இருக்க வேண்டும்.