20
ளோடு நமது வாணிபம் சிறப்புற நடைபெறுகின்றன ! பூம்புகார் துறைமுகத்தில் முத்து வாணிபம் மெத்த நன்று. நாகப்பட்டினம் துறைமுகம் நன்கு முன்னேறி யுள்ளது ! என்றாலும் சமயப் பூசல் அங்கே மிகுந்து நிற்கிறது !
கந்தி :- அப்படியா? என்ன நடக்கின்றது ?
சீலா :- சைவம், வைணவம், புத்தம், சமணம் போன்ற மதங்களும், அவற்றின் உட்பிரிவுகளும் ஆதிக் கம் வேண்டி மோதிக்கொள்ளுகின்றன! இரு நூருண்டு களுக்கு முன்பு நாகப் பட்டினம் துறைமுகத்திலே, பெளத்த மதத்தைச் சார்த்த சீனத்து வாணிபருக்காக புத்த விகாரை ஒன்று கட்டினர் சக்கரவர்த்தி நரசிம்ம வர்மர் ! அந்தக் கோயிலின் புத்தர் சிலைக்கு நாமமிட்டு, தமதாக்கிக்கொள்ளப் பார்க்கின்றனர் வைணவர்கள் ! சீனத்து வாணிபர்கள் முறையிட்டனர் என்னிடம் வந் திருக்கின்றனர் தங்களைக் காணவும்.
கந்தி :- அப்படியா ? உடனே அவர்களை வரச் சொல்லும் !
(அமைச்சர் சாடையால் கட்டளை யிட, காவலன் ஒருவன் வணங்கி வெளியே சென்று இறு சீனர்களோடு .]
சீனர் :- (வணங்கி) மகா மகாராஜா பல்லவநந்தி மகாராஜா, நாங்கள் சரணம் சொல்லுகிருேம் ! சரணம் சரணம் !
கந்தி - சீனத்து வாணிபர்களே ! பஞ்ச சிலத்தின் து தர்களே ! உங்களுக்கு என்ன குறை நேர்ந்தது?