இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காட்சி 18.
இடம்: வித்யாவதி வீடு.
காலம் : மாலை.
(கையிலே உள்ள ஒலையை பரப் பரப்போடு படித்துக் கொண்டிருக் கிருள் வித்தியாவதி.)
“பாண்டியன் பூநீ வல்லவன் படை எடுக்குமுன் காஞ்சியிலே நமது பன் றிக் கொடி பறக்க வேண்டும் ! பாண் டியன் நமது நேச மன்னன். எனவே தம்மை எதிர்க்க மாட்டான். பல்லவ நாட்டைக் கைப்பற்ற சாதகமான சூழ் நிலை. தாமதம் கூடாது உடனே சந்திரவர்மனை கொன்று விடவும், மிகவும் அவசரம் !’
-பங்கையன் சாளுக்கிய மன்னன்.
மைத் :- வித்யாவதி 1 என்ன ஒலை ? வித்யா . (பதைத்து) ஆ சண்டாளா ! ஒவியணு நீ! சாளுக்கிய நாட்டின் ஒற்றன் ! பல்லவ ஆட்சியைக் கவிழ்க்க வந்த அரசியல் கொலைகாரன் !
மைத் : யார் கூறியது அப்படி? வித்யா :- இதோ, இந்த ஒலை.
(விட்டெறிகிருள், பரபரப்போடு எடுத்துப்பார்த்து)