14
மனிதப் பிறவியே வேண்டாமென வெறுத்த ஞானிகளும் பாடுகின்றனர் இப்படி குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்’, எனத்தொடங்கி ‘இனித்தமுடை எடுத்த பொற்பாதமும் கானப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே'!
நந்தி :- இது நாவுக்கரசர் நல்வாக்கு அன்றாே ?
சங்கா - ஆமாம் ; இந்த அருள் வாக்கு காட்டு கின்றது, நாட்டியக் கலையின் செல்வாக்கை.
சிற்பி :- மாமன்ன! கருவம் என் கண்களை மறைத் தது! என் பிழை பொறுத்தருள வேண்டும் பொறுத் தருள வேண்டும்!
கந்தி - மன்னித்து விட்டாரே மகாராணியார் : கவலைப்படாதீர்! கண்ணும் கருத்துமாக கலைப்பணியை தொடரும் ! காவியமும் ஒவியமும், சிற்பமும் சிருங்கார மும் வளர்வதற்கு என் வாழ்வையே அர்ப்பணிக்கத்தயங் காதவன் நான். எனது விருப்பத்தைச் சுணங்காது நிறைவேற்றும். எதனுலும் குலையாத அமர சிற்பமாக ஆக்கும் இதன.
சிற்பி :- கட்டளை, கட்டளை மகாராஜா !
|வணங்கு கி ரு ன், மன்னனும், மகாராணியும் கைகோர்த்த வண்ணம் செல்லுகின்றனர்.)
w