74
“ஈட்டியின் திண்ணி(து) எழுதுகோல்!” என்பதை
நாட்டினான் பின்வந்த நாளினில் வால்டரே!4
“வில்லே (நழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை!” எனும் முப்பால்!
“பழகு மிடத்தைப் பகர்க!உன் பண்பை
மொழிவேன்!” எனவே பிரெஞ்சு மொழியாம்!5
“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்(கு)
இனத்தியல்ப தாகும் அறி(வு)” எனும்இன்குறள்!
வெற்பைக் குடைந்தெடுத்தே மேன்மை அழகுதரு
சிற்பம் படைத்தான்; திகழோ வியமளித்தான்;
கார்வானை முட்டும் கலை கொழிக்கும் கோபுரமும்,
தேரும், செழுந்தாது பொற்சிலையும், கண்கவரும்
ஊரும் தெருவும், உணவூட்டும் நன்செய்க்கே
ஏரியும் தாங்கலும் ஈந்தோன் தமிழனன்றோ?
கோட்டையும் கொத்தளமும், கூழுக்கே ஏங்காநல்
நாட்டையும் கண்டவன் நற்றமிழன் ஆகானோ?
கற்றோரைப் போற்றிக் கருத்தேற்று நல்ல தமிழ்க்
கொற்றம் விளைத்தவன் யார்? கூறுமின்! வாழுமிவன்
மற்றோரும் தன்போல் மதித்து மறம்விளக்கி
வெற்றியை நட்டோனும் மேன்மைத் தமிழனன்றோ?
சங்கம் வளர்த்தான்; தமிழ்வளர்த்தான்; சான்றோர்க்கே
எங்கும் பொருளை இறைத்தளித்துக் காத்தவனார்?
மங்காப் பெரும்புகழ்சேர் மாத்தமிழன் கற்றளி
எங்கும் கிடைக்கிறதே! என்ன இதன்பொருளாம்?
கத்து கடல் தாண்டிப் பாயால் கலம் நடத்தி
முத்தளித்தோன், வீரமுரசறைந்தோன் நம் தமிழன்
பண்பிற் கிலக்கணத்தைப் பாரோர் புகழும் நல்