உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162


பள்ளிப் படிப்போடு பலதொழிலில் ஒன்றேனும்
உள்ளம் அறிந்திருந்தால், ஓய்வான நேரத்தில்

செய்து பொருள்தேடிச் சிறப்போடு வாழ்ந்திடலாம்;
உய்யும் வழியிதுவாம்; உடனடைவோம் பொற்காலம்!

நாட்டில் தொழில்வளர நம்மரசு தமிழரசு
காட்டும் பொறுப்புக் கணக்கில் அடங்காதே!

பாலுக்கு மாதவரம்; பயிர் செய்யக் கோவை!
ஆலைக் கொதிகலங்கள் ஆக்கும் சிராப்பள்ளி;

மின்விளைக்க எண்ணூர்; மேன்மைமிகு நெய்வேலி;
பொன்விளைக்கச் சேலம்; புதுச்சுண்ணம் காணக்

கல்லக்குடி; எண்ணெய் கண்டுதவ நன்மணலி;
கல்பாக்கம் அணுமின்; கடற்கூவ மண்ணெடுப்பு;

ஆன்ற தொழில்பலவும் அரசமைத்துத் தந்துளதாம்;
சான்றோர்கள் வாழ்த்துகிறார்; தமிழ்நாட்டீரி! நாமும்

தொழில் நுணுக்கம் கற்றுத் துறைதோறும் சென்று
பழகித் தொழில்வளர்ப்போம், பார்புகழ வாழ்வோம்!

காசுள்ளோர் வந்தால் கருத்துக் கிசைந்தபடி
பேசிப் பெருந்தொழிலைப் பேணுதற்கு வாய்ப்பளிக்க

அண்ணா வழிவந்த ஆணழகர் நம்கலைஞர்
விண்ணப்ப மிட்டால் விரும்பியதைச் செய்வாரே!

பொருள்மிகுந்தோர் நற்செழிலைப் போற்றிவளர்ப்பீரே!
இருளில்லா வாழ்க்கை தொழில்வளத்தால் எய்திடுமே!

கழிபே ருவகைக் களிப்போடு நாமெல்லாம்
தொழில்வளர்ப்போம் என்றும் தொடர்ந்து!

நாள்: 'தமிழரசு' வெள்ளி விழா மலர், 1971.

இடம்: தமிழரசு' இதழ் வெள்ளி விழா மலர் - சாதனைக் கவியரங்கம்

தலைப்பு: பொற்காலம் காண-தொழில் வளர்ப்போம்.