பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జేః 甄師·圈』s斑睡部磁}缺}。。。。。。。。。。。。。。。。 曲 ° 0 物 @ * 砂 ° @ a 需 147 ཝཟླ༑ཙ தரையிலிருந்து நீர் தோன்றச் செய்து செம்பில் நிரப்பிக் கொணரச் செய்து சந்தியாவந்தனம் செய்து முடித்தான். தன்னை நம்பவில்லையே என்று அனுமன் கோபித்துக்கொண்டான். இராமன் அவனைச் சமாதானப்படுத்துவதற்காக அம்பால் தோண்டிய ஊற்றுக்கு அனுமன் தீர்த்தம் என்று பெயர் வைத்தான்." இந்தப் புனைகதை, ஊற்றின் தோற்றம் பற்றிய விளக்கமாக இன்றும் அப்பகுதி மக்களிடையே வழங்கி வருகிறது. அம்பின் மந்திர சக்தி பற்றிய கதைகள் (legends) இந்தியக் காப்பியங்கள் பலவற்றில் உள்ளன. இது போலவே திருமாலின் சக்கரம், முருகனின் வேல், பீமனின் கதை, இந்திரனின் வஜ்ராயுதம், டையனாவின் திரிசூலம், மர்டாக்கியின் வேல், இராவணனின் வாள், இவற்றிற்குச் சாதாரணப் போர்க் கருவிக்கு மேற்பட்ட மந்திர சக்தியுண்டு என்ற நம்பிக்கை புராணங்களிலும், தனியான புனைகதைகளிலும் உள்ளன. இதற்கு ஒரு மானிடவியல் காரணம், உலோக காலத்துவக்கத்தில், உலோக ஆயுதங்கள், கல் ஆயுதங்களைவிட வலிமையுடையவையாக இருந்தது குறித்துப் பண்டைய மனிதனது அதிசய உணர்வே. உடல் வலிமையின் பிரதிநிதியான அனுமன், செய்ய முடியாத காரியத்தை, வில் அம்புதரித்த இராமனால் செய்ய முடிந்தது. வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகளின் விளைவாக உருவாக்கப்பட்ட கருவிகளின் மேன்மையை இது குறிப்பிடுகிறது. உடல் வலிமை, உலோக ஆயுத வலிமைக்குத் தாழ்ந்து விடுகிறது. 4. அனுமகுண்டம் திருக்குறுங்குடி மலையில் மகேந்திரகிரி என்று பெயரிடப்பட்ட சிகரம் ஒன்றுள்ளது. இதன் மேல் பெரிய கால் சுவடு ஒன்று 4 அடி ஆழத்தில் வெட்டப்பட்டுள்ளது. இங்கு மழை காலத்தில் நீர் தேங்கி நிற்கும். இது குறித்து அனுமனோடு தொடர்புடைய புனைகதை ஒன்றுள்ளது. இம் மலை மீது ஏறித்தான் அனுமன் இலங்கைக்குத் தாவினான். தாவும்பொழுது விசுவரூபம்கொண்டான். சிற்றுருவில் இருந்த அனுமன் பேருருவம் கொண்டபோது மலையில் கால் பதிந்து ஒரு சுவடு ஏற்பட்டது. ஒர் ஊற்றுத் தோன்றி அவனது பாதங்களை நனைத்தது."