உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

பச்சை ;- ஏனுங்க சுவாமி ?

மைத் :- பெரியவர்களிடம் விவாதம் பேசக்கூடா தடா! நான் வருகிறேன். சாயங்காலம் வித்யாவதியின் வீட்டுக்கு வருகிருயா?

பச்சை :- வர்றேனுங்க.

(மைத்ரேயன் ஒருபக்கம் போக, மறுபக்கம் பெருந்தேவனுர் வருகிறார், !

பச்சை : வணக்கம் !

பெருங் - வாழ்க! பச்சை! நலமாக இருக்கின்றாயா?

பச்சை : அப்பாவும் போயிட்டாரு, அம்மாவும் போயிட்டுது. வீடும், சொத்தும் கடனுக்குப் போயிட்டு துங்க, என்னமோ தெருவிலே சாப்பாடும், திண்னை யிலே தூக்கமுமா காலம் போவுதுங்க.

பெருங் : (வருந்தி) அம்மாவும் இறந்துவிட்டார் களா? இருக்க இடமற்றுவிட்டதா? அடடா ! என்ன பாதாபம் ! ஒரு தமிழ்ப் புலவரின் மகனுக்கு இத்தகைய தாழ்வா வரவேண்டும்? பச்சை மன்னருக்கு உன் நிலை தெரியுமோ?

பச்சை :- அவர் தம்பி சந்திரவர்மர்தான் என்னை ஆதரிக்கிருருங்க, அவரு சொன்னதைச் செய்வேன். கொடுத்ததைத் தின்பேனுங்க !

பெருங் :- சந்திரவர்மனிடம் ந ட் புரிமை கொண் டிருக்கிருயா? நன்று, இடம் நல்லதுதான், நடத்தை...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/38&oldid=671988" இலிருந்து மீள்விக்கப்பட்டது