பக்கம்:நந்திவர்மன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 14,

இடம் : அந்தப்புரம்

காலம் : பிற்பகல்

|மகாராணி சங்கா தேவி பாடிய வண்ணம், மகன் நிருபதுங்கனுக்கு வாட்போர் கற்பிக்கிருள் (மகாராணி யின் வாள் விழுகிறது)

கிருப :- (கரித்து) தோல்வி ! என்னிடம் தோற்று விட்டீர்களம்மா ; தோற்றுவிட்டீர்கள் !

சங் :- (வாளையெடுத்து) அவசரப்படாதே மகனே! அற்ப மகிழ்ச்சியில் அறிவை இழந்து விடாதே! வெற்றி யும் தோல்வியும் இடையிலல்ல, இறுதியிலே தெரிபவை ! விசு கத்தியை.

கிருப :- ஒ இன்னும் இருக்கிறதா? இதோ உங் களை வெல்லாமல் விடுவதில்லை. உம் ? (மீண்டும் வாட் போர். மன்னன் நந்திவருமன் வருகை)

கந்தி : (மகிழ்ந்து) நன்று ! நன்று பேச்சிலே காரமும், வீச்சிலே வீரமும் மின்னலோடுகின்றன. என் மகன் வீரன் ! மாவீரன் !

(பயிற்சி நிற்கின்றது)

நந்தி : சங்கா சகல கலாவல்லியே : புதல்வன் களப் போரில் வல்லவனுவான், இல்லை யில்லை, வல்ல வனுக்கிடுவாய் நீ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/65&oldid=672018" இலிருந்து மீள்விக்கப்பட்டது