உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

இந்தி - சங்கா ! இந்தப் புதிய சிற்பி, சிறந்த சைத் ரிகனும்கூட! மகாமேதை!

சங்கா - ஆணுல், யானைக்கும் அடி சருக்கும் என்

பார்கள். சிற்பத்திலே சிறிய குறையொன்று இருக் கின்றது !

சிற்பி - (தற்பெருமையோடு) நான் செய்த சிற்பத் திலா? குறையா? இந்த யானைக்கா அடிசருக்கி விட் டது? இருக்கவே முடியாது இருக்கவே முடியாது?

சங்கா - இருக்கிறது சிற்பியாரே லதாவிரிசிக நாட்டியத்திற்குரிய அபிநயத்தில், கடாட்ச முத்திரை முறைப்படி அமையவில்லை !

சிற்பி - (செருக்கோடு சிரித்து) முறைப்படி ..... மகாராணியார் நாட்டியம் கற்றுத் தேர்ந்த கலாசாகரம் போல் விமர்சிக்கிறார்களே ! (சிரிப்பு)

கந்தி:- (சிரித்து) பாவம் சங்கா கற்றறிந்த உன் கலா ஞானத்திற்குக் கடுமையான சோதனை வந்து விட்டது! பார்த்துக்கொள்: ஆமாம், லதாவிரிசிக நடனத் திற்குரிய விரல்களின் கடாட்ச முத்திரை எப்படி இருக்க வேண்டுமென்கிறாய்? காட்டேன்பார்ப்போம்!

சிற்பி - (சிரித்து) எப்படிக் காட்ட முடியும் பிரபு? கலையைப் பற்றி எவர்க்கும் வாயால் பேசுவது எளிது ! செயலில்தானே முடியாது! முடியாது !

நந்தி :- அப்படிப் பொழியும் அறிவுரையை! சங்கா! சரியான போடு போட்டுவிட்டார் சிற்பியார் ! எங்கே பார்க்கிறேன் உன் கலா வல்லமையை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/13&oldid=671890" இலிருந்து மீள்விக்கப்பட்டது