உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 19.3

6. போக்குவரத்துச் சாதனங்களை அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்படுத்துதல்.

7. தொழிற்சாலைகள், பொருள் உற்பத்திச் சாதனங்கள் முதலியவற்றை அரசாங்க மயமாக்கி அவற்றைப் பெருக்குதல். தரிசு நிலங்களைச் சாகுபடிக்குச் கொண்டுவருதல், பொதுவான ஒரு திட்டம் வகுத்து, அதன்படி நிலத்தைப் பயன்படுத்திப் பலன்பெறுதல்.

8. எல்லோரும் வேலைசெய்யக் கடமைப்பட்டவர்கள் என்ற விதியை அனுசரித்து தொழிற் சேனே ஒன்றை நிறுவுதல்.

9. விவசாயத்தையும் உற்பத்தித் தொழில்களையும் ஒன்று படுத்துதல். மெதுவாக நாட்டுக்கும் நகரத்திற்குமுள்ள வேற்றுமையை ஒழித்தல். இதற்கு அனுசரணையாக மக்களைக் கிராமங்களில் குடியேறச் செய்தல்.

10. அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் எல்லா குழந்தை களுக்கும் இலவச கல்வி அளித்தல். பிள்ளைகளைத் தொழிற் சாலைகளில் அமர்த்தி வேலே வாங்குவதை ஒழித்தல். கல்வியை யும் பொருள் உற்பத்தியையும் ஒன்று படுத்துதல்.

இந்த முறைதான், ரஷ்யாவில் லெனின் அவர்களால் கொண்டுவரப்பட்டு நடைமுறையில் இருக்கின்றது. இன்னும் விரிவாக விளக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கார்ல் மார்க்சின் காப்பிடலைப் படித்துத்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.

மார்க்சும், ஜென்னியும் எந்தவிதமான வாழ்க்கை வாழ்ந் தார்கள் என்பதை ஜென்னியின் வாயால் கேட்போம். “ஒவ் வொரு நாளும் எங்கள் வாழ்க்கை எப்படி நடந்து கொண்டி ருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு நாள் வாழ்க்கையை மட்டும் சொல்கிறேன்.” -

“குழந்தைக்குப் பால் கொடுக்க ஒரு தாதியை அமர்த்திக் கொள்வோம் என்றால் அதற்கு இங்கு செலவு அதிகம். ஆகை யால் என் மார்பு வலியையும் பொருட்படுத்தாது. முதுகு வலி