பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 களால் பாடப் பெற்றவர்கள் அல்ல. என்றாலும் கேதா ரேஸ்வரனை நினைத்தால் சுந்தரர் பாடிய கேதாரப்பதிகம் ஞாபகத்திற்கு வராமல் போகாது. அதிலும் அந்த வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம் பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்த பறிதான் தாழாது அறம் செய்ம்மின் தடங்கண்ணான் மலரோனும் கீழ்மேலுற கின்றான் திருக் கேதார மெனிரே என்ற பாடல் படிக்கப்படிக்க சுவையுடையதாயிற்றே : மனித வாழ்வு அநித்யம்தான் என்றாலும் அந்த மனிதன் அமைத்த கலைக்கோயிலும் மூர்த்தியும் நித்யத்வம் வாய்ந் தவைகளாக அல்லவா நிலைத்து விடுகின்றன! இந்த ஹலபேடில் இன்னும் பார்க்க வேண்டிய கோயில் கள் பல உண்டு. அவையெல்லாம் சமணக் கோயில்களே. அன்று எண்ணிறந்தவை இருந்த இடத்தில் இன்று ஒரு சில கோயில்களே சிதிலமடைந்து நிற்கின்றன. அவைகளில் முக்கியமானவை, ஆதிநாத ஈஸ்வரர், சாந்தேஸ்வரர் பார்சளுதேஸ்வரர் கோயில்களே. இவைகளில் உள்ள தூண் கள் எல்லாம் கண்ணாடிபோல் பளபளக்கும்படி செய்து அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்குளள ஆதிநாத பஸ்தியின் முன்புள்ள கம்பம் ஒன்றை, பிரம் மகம்பம் என்கின்றனர். இந்தக் கம்பத்தின் கீழ் பக்கத்தில் குதிபோட்டுக்கொண்டு ஒடும் குதிரை ஒன்றிருக்கிறது. அதுவே சமண சிற்பத்தில் பிரம்மனைக் குறிக்க அமைந்தது என்று அறிகிறோம். சரி. சமணம் ஆனாலும் சரி, சைவம் ஆ னா லு ம் ச ரி, இல்லை வைஷ்ணவம் ஆனாலும் சரி. எல்லாம் கலை அழகு நிரம்பி யவைகளாயிருப்பது ஹொய்சலரது சிற்பக்கலை என்று தெரிந்து கொண்டோமானால், அது போதும் நமக்கு.