பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 : 1 களிலேதான் சூரிய கிரஹண காலத்தில் மக்கள் திரளாகக் கூடுகின்றனர். அது ஒரு பெரிய மேளாவாகவே நடக்குமாம். இக்குளங்களுக்குக் கொஞ்சம் மேற்கேயுள்ள சமவெளியில் தான் லட்சுமி நாராயணன் கோயில் இருக்கிறது. அது டில்லியில் பிர்லா மந்திர் போலவே இருக்கிறது. சமீப காலத்தில்தான் கட்டப்பட்டிருக்கவேண்டும். இங்குள்ள பிரதான சந்நிதியில்தான் கண்ணன் பார்த்தனுக்கு கீதை உபதேசம் செய்யும் காட்சி பளிங்குச் சிலைவடிவில் அமைக் கப்பட்டிருக்கிறது. பக்கத்தில் உள்ள சின்னக் கண்ணன் நல்ல அழகான வடிவம். இந்த வட்டாரத்திலேயே சந்திர தீர்த்தம், பாதாள கங்கை முதலியவற்றோடு ஒரு காளி கோயிலும் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துவிட்டோம் என்று ஊர் திரும்ப முடியாது. கண்ணன் கீதை உபதேசம் செய்த இடம் இது அல்ல, அது இங்கிருந்து தெற்கே நாலு மைல் தொலை வில் இருக்கிறது என்பர். சரி என்று காரைத் திருப்பி அந்த இடத்திற்கும் செல்லவேண்டியதுதான். அங்கும் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அதனையே ஜோதிசரஸ் என்கின்றனர். அக்குளக்கரையிலே ஒரு பெரிய ஆலமரம். அதைச்சுற்றி ஒரு பீடம் எல்லாம் இருக்கிறது. அந்த ஆலமரத் தடியில், கீதை உபதேசம் நடந்தது என்கின்றனர். அப்படியானால் அந்த ஆலமரம் அந்த இடத்தில் 5000 வருஷங்களுக்கு மேலாக நின்றிருக்க வேண்டும். இடை இடையே இந்த மரம் வாடிவாடிப் பின்னரும் தழைத் திருக்கிறது என்கின்றனர். அதுதான் கீதோபதேசம் நடந்த இடம் என்பதைக் குறிக்க ஒரு சிறிய தேரும் அந்தத் தேரில் கண்ணன் பார்த்தன் பொம்மைகளும் வைத்திருக் கின்றனர். பக்கத்திலேயே ஒரு சிவன் கோயிலும் இருக் கிறது. அக்கோயிலை ஐம்பது வருஷங்களுக்குமுன் காஷ்மீர் மகாராஜா கட்டிவைத்தாராம். இன்று ம் தர்பங்கா மகாராஜா முதலியோர் இங்கு பல சிறு கட்டிடங்கள் கட்டி வைத்திருக்கின்றனர். அங்கு ஒரு கீதாமந்திரும் இருக்கிறது.