உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டம்-முறை-காவல்

93


?

அனைவரும் ‘சிவத்துரோகிகள் என்று தீர்மானிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுடைய நிலங்களும் பிற உடைமைகளும் திருநாமத்துக்காணி என்ற பெயரில் கோவிலுக்குச் சேர்க்கப்பட்டன. அச்சொத்துக்கள்மீது முன்பே பணம் கொடுத்தவர், கோவிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு, தங்கள் அடைமானத்தை விடும்படிக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.”

சில கல்வெட்டுச் செய்திகளிலிருந்து கோவில் அதிகாரி’ களும் ஊர் அவையினரும் திருடு முதலிய குற்ற வழக்குகளே விசாரிக்கும் உரிமை பெற்றிருந்தனர் என்பது தெரிகிறது. ஒரு கோவில் திருட்டு வழக்கில் குற்றவாளியின் சொத்துப் பறிமுதல் செய்யப்பட்டது : ஒரு கை வெட்டப்பட்டது : அவன் கிராமத்திலிருந்து விரட்டப்பட்டான்.”

தண்டனை

குற்ற வழக்குகளில் குற்றங்களுக்கு ஏற்றவாறு தண்டனை மென்மையாகவும் வன்மையாகவும் இருந்து வந்தது. பணம். தண்டமாக விதித்தல், சிறையில் கைகால்களை வெட்டுதல், தூக்கிலிடுதல், குத்திக் கொலை செய்தல், யானையின் காலால் இடறுவித்தல் முதலிய தண்டனைகள் கொடிய குற்றவாளி களுக்கு விதிக்கப்பட்டன. இவற்றாேடு குற்றவாளிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. -

சங்க காலத்தில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி’ வளவன் மலையமான் மக்களை யானை க் கு இட்டுக் கொல்ல நினைத்தான் என்பது புறப்பாடலால் அறிகின் ருேம்.”

1. Ins. of Pudukkotta; State, 691. 2. Ibid 867. 3. செ. 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/100&oldid=573618" இலிருந்து மீள்விக்கப்பட்டது