உள்ளடக்கத்துக்குச் செல்

மீடியாவிக்கி பேச்சு:Wsexport about

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

ஒவ்வொரு நூலிலும் இதனை இணைப்பது, பங்களிப்பாளர்களுக்கு, மனநெகிழ்வை உருவாக்கும். வாசித்தபோது, மொழிபெயர்ப்பு என தெளிவாகத் தெரிகிறது. கொஞ்சம் மன நெருக்கத்துடன் பேசுவது போல அமைய விருப்பம். அதனால், பின்வரும் எனது எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

  • //இம்மின்னூல், இணைய நூலகமான விக்கிமூலத்தில் இருந்து வருகிறது[1].// உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமானத் திட்டமான, விக்கிமூலத்தில் கிடைத்துள்ளது.
  • பன்மொழி நூலகம் அல்லவே. தமிழ் மொழி நூலகம் தானே. அதனால் தானே பகுப்பு:ஆங்கில விக்கிமூலத்திற்கு நகர்த்த வேண்டிய மின்னூல்கள் என்பதைத் தொடங்கியிருக்கிறோம்.
  • //தன்னார்வலர்கள் மூலம் சாத்தியமாகிறது.// தன்னார்வலர்களால் வளருகிறது. ஆதலால், ஒரு பங்களிப்பாளராகவோ அல்லது பதிவிறக்கிப் படிப்பவராகவோ மாறுங்கள். உங்களின் பின்னூட்டம் இத்திட்டத்தினை மேம்படுத்தும். எனவே, ஒவ்வொரு நூலினைப் பற்றியும், அந்நூலின் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
  • புத்தகம் என்ற சொல்லை மின்னூல் என மாற்றுங்கள்.
  • இம்மின்னூல் உருவாக்கியவர்கள் (CONTRIBUTORS)

-- உழவன் (உரை) 00:46, 4 செப்டம்பர் 2016 (UTC)

//தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் // என்பதை

தயக்கம் இல்லாமல், அம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் என எளிமையாக்கலாம். மற்றொன்று,

சாத்தியமாவதற்கு(வடமொழி) --> உருவாக்குவதற்கு

என மாற்றினால் மேலும் நன்றாக இருக்குமென்று கருதுகிறேன்-- உழவன் (உரை) 04:51, 4 செப்டம்பர் 2016 (UTC)

@Info-farmer:: தங்கள் கருத்துக்கு நன்றி. தாங்கள் கூறிய மாற்றத்தை பெரும்பாலும் செய்து விட்டேன். "இம்மின்னூல் உருவாக்கியவர்கள் " என்று அனைவரையும் கூற முடியாது. ஒருவர் உருவாக்கியிருப்பார். மற்றவர்கள் மாற்றவர் மாற்றம் செய்திருப்பர். அதனால் பங்களிப்பாளர் என்று கூறுவோம். மேலும், பின்வரும் வரிகளை போன்று தமிழில் எவ்வாறு எழுதலாம்.
"We do it for free, by collecting only texts in the public domain or under a free license. Regarding the books under a free license, you can use totally free manner, either for non-commercial or commercial reuse, respecting the terms of the license Creative Commons BY-SA 3.0  or, in your convenience, those license GNU FDL "

"உருவாக்குவதற்கு" பதிலாக வேறு நல்ல வார்த்தையை சொல்லுங்கள். சாத்தியத்திற்கு இணையாக.. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:02, 4 செப்டம்பர் 2016 (UTC)

//இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பின்வருபவர்கள் பங்களித்துள்ளனர்.// என்பதை /-/ இம்மின்னூலாக்கத்திற்கு பங்களித்தவர்கள்/-/ அமைக்கலாமென்று எண்ணுகிறேன்.
உரிமத்தைப்பற்றி இப்பொழுது குறிப்பிட வேண்டாமென்று எண்ணுகிறேன். நமது இரண்டாம் பக்கம் ஏற்கனவே உரிம்ப் பக்கமாக உள்ளது. படங்களுக்கான உரிமத்தைப் பெறும்போது அது தானாகவே இற்றையாகி விடும். மற்றமொழியில் இதுபோல் இரண்டாம் பக்கத்தினை இணைக்கும் முறை இல்லை என்பதால், மேற்கூறிய ஆங்கிலத்தகவல்களைச் சேர்த்திருக்கலாம். நம் வழி! தனி வழி!! உழவன் (உரை) 05:20, 4 செப்டம்பர் 2016 (UTC)
@Info-farmer: “இம்மின்னூலாக்கத்திற்கு” என்பது பெரிய வார்த்தையாக இருக்கிறது. அவ்வளவு நன்றாக தோன்றவில்லை. மேலும் கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள். இரண்டாம் பக்கத்து உரிமை பக்கம் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் மட்டுமே வரும். அது தவிர நிறைய இலக்கியங்கள் உள்ளன. அவை பதிவிறக்கம் செய்யும் பொழுது உரிமத்தைப்பற்றி எந்த விவரமும் இருக்காது. அதனால் உரிமத்தைப்பற்றி ஓரிரு வரி சேர்த்தால் பொதுவாக இருக்கும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:41, 4 செப்டம்பர் 2016 (UTC)

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── “இப்படைப்பிற்கு - இந்த ஆக்காத்திற்கு ” எனலாமா? ஓ,,ஆமாம். உங்களைப்போன்று ஒட்டுமொத்த சிந்தனை எனக்கில்லை. நாட்டுடைமை நூல்களை மட்டுமே எண்ணியிருந்தேன். பின்வருமாறு மொழியாக்கம் செய்யலாமென்று எண்ணுகிறேன்.

இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL ) அளிக்கப்படுகிறது. எனவே, இதன் எழுத்துக்களை மட்டும்,  நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும்; வணிகநோக்கமின்றியும் பயன்படுத்தலாம். 
 
உழவன் (உரை)   06:04, 4 செப்டம்பர் 2016 (UTC)

இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL ) இலவசமாக அளிக்கப்படுகிறது. எனவே, இப்படைப்பை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம் --கி.மூர்த்தி (பேச்சு) 07:07, 4 செப்டம்பர் 2016 (UTC)

என் கருத்து

[தொகு]

பின் வருமாறு அமைந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

"உங்களுக்கு இம்மின்னூல், இணைய நூலகமான, விக்கிமூலத்தில் இருந்து கிடைத்துள்ளது வழங்கப் பெறுகிறது.[1].

இந்த இணைய நூலகம் தன்னார்வலர்களால் வளருகிறது பெருகுகிறது.. விக்கிமூலம் பதிய தன்னார்வலர்களை வரவேற்கிறது. தாங்களும் விக்கிமூலத்தில் இணைந்து மேலும் பல மின்னூல்களை அனைவரும் படிக்குமாறு செய்யலாம்.

மிகுந்த அக்கறையுடன் மெய்ப்பு செய்தாலும், மின்னூலில் பிழை ஏதேனும் இருந்தால் தயக்கம் இல்லாமல், விக்கிமூலத்தில் இம்மின்னூலின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கலாம் அல்லது பிழைகளை நீங்களே கூட சரி செய்யலாம்.

இப்படைப்பாக்கம், கட்டற்ற உரிமங்களோடு (பொதுகள /குனு -Commons /GNU FDL )[2][3] இலவசமாக வழங்கஅளிக்கப்படுகிறது. எனவே, இந்த உரையை நீங்கள் மற்றவரோடு பகிரலாம்; மாற்றி மேம்படுத்தலாம்; வணிக நோக்கத்தோடும், வணிக நோக்கமின்றியும் பயன்படுத்தலாம்

இம்மின்னூல் சாத்தியமாவதற்கு பங்களித்தவர்கள் பின்வருமாறு: {CONTRIBUTORS}"

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி