பக்கம்:மொழியைப் பற்றி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - மொழியைப் பற்றி.

என்று இலெனின் கொள்கைப் பரப்பிலும் விளம்பரத்துறை யிலும் ஈடுபட்டிருப்பவர்களின் கடமையை வலியுறுத்துகிறார். வரலாற்றைப் படைக்க வேண்டியது அவர்களின் பணி. அதை அவர்கள் தொடர்ந்து நாள்தோறும் செய்யவேண்டும். அதன் மூலமே வருங்காலம் சீராக அமைக்க முடியும் என்பதை அழகாக எடுத்துரைத்திருக்கிறார். நாட்டு மக்களின் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் கருத்துகளுக்கு முதன்மை தரவேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். வகுப்புப் போராட்டம் வெற்றிபெற விளம்பரம் சரியான முறை (மொழி) யில் அமையவேண்டும் என்பதில் இலெனின் எவ்வளவு பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார் என்பது நமக்குப் புலப்படுகிறது. --- எழுத்தாளர் எப்படி எழுதவெண்டும், அதற்கான வழி முறைகள் என்ன, எப்படி எழுதினால் புரட்சிக்குப் பயன்படும் என்பதைத் தீவிரமாக ஆராய்ந்து அவர் வெளிப்படுத்தி இருப்பதும் உற்றுநோக்கத் தக்கது. - - -

புரட்சிப் படைவீரர்களுக்குப் பயிற்சி தரும் பேராசிரியர்கள் தங்களின் அறிவியல் வெளிப்பட தன்மூப்பாட்சி (சர்வாதிகாரம்) என்பதற்குப் புது விளக்கம் தந்துள்ளனர். உறுதியான பாதுகாப்பு' என்று முப்பதிகாரத்திற்குப் புதிய பொருள் தந்துள்ளனர். புரட்சிப் போராட்டங்களை இழிவு படுத்தும் நோக்கத்துடன் இந்த அறிவியலாளர்கள் முனைந்திருக் கின்றனர். வரம்புக்கு மீறிய அதிகாரத்தை வல்லந்தமாகப் பறித்து வைத்திருப்பதும், சட்டமுறையாகப் பெற்றுப் பொறுப் பேற்பதும் வேறு வேறானது. ஆனால், இரண்டு முறைகளிலும் வல்லாட்சி விளங்கலாம். இதில் கொள்ள வேண்டிய முதல் கருத்து, சிறுபான்மையினர் மீது வல்லாதிக்கம் செலுத்துவ தாகும். வல்லாட்சியில் ஒரு சில அதிகாரிகள் மட்டுமே, மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். - - மக்கள் அதிகாரங்களை, உரிமைகளைப் பறித்துத், திருடர்கள், கொள்ளைக் கூட்டத்தினர், கொடுமைக்காரர்கள் மீதும் மூப்பதிகாரம் இயங்குகிறது. இந்த அறிவியல் உண்மைக்கு மாறுபட்ட கருத்துகளைப் புனைந்து கூறுவதன் மூலம் இடது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/32&oldid=713829" இலிருந்து மீள்விக்கப்பட்டது