உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசுரிமை

37



அரண்மனை அலுவலர்

அரசனது அரண்மனையில் வேலை செய்யும் ஆண்கள் பலர் ; பெண்கள் பலர். அரசனது தனித் தன்மையைப் பாதுகாக்கவென்றே அமைந்த பணிமக்கள் பலராவர். அரண்மனைக்குத் தேவையான உடைகளைத் தைப்பவர், நகைகளைச் செய்பவர், தோட்டங்களைப் பாதுகாப்பவர். விளக்கேற்றுபவர், அரண்மனைப் பொருள்களேத் துடைப் பவர் எனப் பலவகைப் பணிமக்கள் அரண்மனையில் வேலை செய்தனர். அரசனது தனித் தன்மையைப் பாதுகாப்பு வருள் வெண்கொற்ற குடையை ஏந்தி வருபவர், விளக்குக் கொண்டு வருபவர், அரசனுடைய கரிகளேயும், பரிகளேயும் கவனிப்பவர், வெற்றிமுரசு கவனிப்பவர், அடைப்பைக்காரர் சாமரம் வீசுபவர் என்பவர் குறிக்கத் தக்கவர். அரசனுக்கு வெற்றிலை பாக்குக் கொடுப்பவர் அடைப்பக்காரர் எனப் பட்டனர். அவர் இருவகைப் பட்டனர். முதல் வகையினர் பெரிய பிள்ளையாண்டான் எனவும், இரண்டாம் வகையினர் சிறிய பிள்ளையாண்டான் எனவும் பெயர் பெற்றனர்.

சோழப் பேரரசர் அரண்மனையில் பேரரசர் நாடோறும் நடத்திய வழிபாட்டிற்குரிய பணிகளைச் செய்துவந்த பணி மக்கள் பலராவர். அவர்களைக் கண்காணிக்க ஓர் உயர் அலுவலன் இருந்தான். அவனது அலுவற் பெயர் தேவார காயகம் என்பது.”

அரண்மனைப் பணிமக்கள் பல கூட்டங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தனர். ஒவ்வொரு கூட்டமும் வே ள ம் எனப் பட்டது. அவருள் பெண்களே மிகப் பலராவர். ஒரு சோழனது அரண்மனையில் மூவாயிரம் ஆடல் பாடல் மகளிர்

l, Pudukkottai State Manual, p. 446. 2. தேவாரம்’ என்னும் சொற்கு வழிபாடு’

என்பது பொருள். -தமிழ்ப் பொழில், துணர் 34, மலர் 9, பக். 258.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/44&oldid=573562" இலிருந்து மீள்விக்கப்பட்டது