உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விதியின் நாயகி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக வெளி வாசலுக்குச் சென்றதைக் கண்ணுேட்ட விட்டாள். மீண்டும் மணிச்சத்தம் தொடர்ந்தது. பால்காரன் சைக்கிளில் பறந்திருக்க வேண்டும்: இந்த மணி நாதம், காலப்பனி மூட்டத்தில் உருத் தெரி யாமல்-உருக்காட்டாமல் தோய்ந்து பதிந்து அழுந்தி விட்ட எத்தனையே நிகழ்ச்சிகளின் கபால ஒடுகளிலே “டும், டும்’ என்று மோதி எதிரொலி கிளப்பிய விந்தையை-உண்மையை அவள் எங்ஙனம் மறக்கக் கூடும்? ஏன் மறக்க வேண்டும்? எடுத்த எடுப்பிலேயே சுவை சொட்ட ஆரம்பமாகும் சிது கதையையொப்ப, சிலரது விட்ட குறை-தொட்ட குறை பின் பரினமப் பலனுக்கு ஏற்ப, அவர்களுக்கு வாழ்க்கை சுவை: புடன் அமைந்து விடுகின்றது. அத்தகையதொரு புண்ணியத் துக்கு, அல்லது பாக்கியத்துக்கு இலக்குப் புள்ளியானவள் தான் அகிலாண்டம், அந்தஸ்தில் உயர்ந்தில்லாமற் போன: லும், அழகில் உயர்ந்து நின்ருள் அவள். பேச்சிலும் பார்வை யிலும் செய்கையிலும் நேரியமுறை இழைந்தது. உயர்நிை ஆரம்பப்பள்ளிக் கூடத்தின் உபாத்தியாயர் அவள் தந்தை. தில்லை விளாகத்தில் வேலை. சைவமும் வைணவமும் ஒரே சந்நி தானித்தில் இணைப்புப் பெற்றுத் திகழும் பெருமையைக் கண் குளிரக் கண்டு பேறு பெறவந்த பெரியவர், தம் குறிக் கோளுக்கு வெற்றி காட்டிவிட்டு, அன்றைய இரவுப் பொழு தைக் கழிக்கும் சந்தர்ப்பத்தை அந்த ஆசிரியர் வீட்டில் அடைந்தார். சுற்றி வளைந்து ஒதுங்கிக் கிடந்த சொந்த பந்தப் பாசம் பெரியவர்களின் பேச்சில் தலைகாட்டியது. யதேச்சையாகத் தலைகாட்டினுள் அகிலாண்டம். பாவாடை. யும் தாவணியுமாக ஒடி மறைந்தாள் அவள். ஆளுல் அவளது. கண்களில் தெரிந்த தெளிந்த பார்வையும், இதழ்களில் மடல விழ்ந்த துய முறுவலும் ஒடி மறைந்திடவில்லை. பெரியவர் தம் ஒரே செல்வக்குமரன் ராமலிங்கத்துக்கு அகிலாண்டத் தைப் பெண் கொள்ளப் பேச்சைத் துவக்கினர். பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/6&oldid=476416" இலிருந்து மீள்விக்கப்பட்டது