உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விதியின் நாயகி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அண்டா ஒடத் தலைப்பட்டது. எனக்கு நல்ல மூச்சு வந்தது. பளபளப்பு ஏறிக் கொண்டி ருந்த மிட்டாயில் ஒரு கொத்தை அள்ளி குழல் விளக்கு வெளிச்சத்தில் சோதித்துப் பார்த்தேன். என் புன்சிரிப்பில் மேஸ்திரியின் கவலை கரைந்திருக்க வேண்டும். - விசிறி ஓடுகிறது. வேர்வையும் ஒடுகிறது. - சிட்டையில் ரிக்ஷா கூலியைக் குறித்துவிட்டு, தாம்பூலம் தரித்தேன். சாயங்காலம் வேலை நிரம்ப இருக்கிறது. முதலில் அகிலாண்டத்துக்குத் தபால் போட வேண்டும். குழந்தைகள் "அப்பா அப்பா’ என்கின்றனவாம்! தொழில் கொஞ்சம் சூடு பிடித்துவிட்டால், தைரியமாகக் குடும்பத்தை இங்கே அழைத்து வந்து விடலாம். போன வாரம் ஊர் சென்றபோது என் உடம்பு வாடியிருப்பதாக வருந்தினுள் அகிலாண்டம். எனக்குப்புரியாமல் இல்லை. லாபத்தில் ஈவு கிடைக்குமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன்; ஆனால் கடந்த ஏழு மாதங்களாக, நஷ்டத்தில் ஷேர் கிடைத்து வருகிறது:முருகா!... - . . . . . - - --- புதிதாக வந்த ரெக்ரூட் பொடியனுக்குக் காப்பி வாங்கி வரக்கூடத் தெரியவில்லை. மிட்டாயைக் கீழே சிந்தாமல் பிளாஸ்டிக் பைகளில் அள்ளிப் போடக் கூடவா தெரியக் கூடாது? அதட்டினேன். அழுதுவிட்டான். . . . . 'தம்பி, அழாமல் வேலையைக் கத்துக்க. இப்பவே உழைச்சுப் பழகினல், பின்னல் எவ்வளவோ உபகாரமாக இருக்கும். மிட்டாயை ரொம்பச் சாப்பிட்டுடாதே. வயிற்றுக் கடுப்பு வந்திடப் போகுது!’ என் கடமை முடிந்தது. - х தொழிற்கூடம் சுறுசுறுப்பாகக் காட்சியளிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/44&oldid=476454" இலிருந்து மீள்விக்கப்பட்டது