உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


"தொடர் வாக்கியத்தில் ஒரே எழுவாய்க்குப் பல பயனிலைகள் வரு மிடத்தில் அரைப்புள்ளி இட வேண்டும்."

முக்காற் புள்ளி:-

எட்டுத் தொகை நூற்கள் பின் வருவன: பத்துப் பாட்டென்பது பத்து நூற்களாம். அவை யாவன :.....இவ்வாறு பின் வருவன, அவையாவன என்ற சொற்களின் பின் முக்காற் புள்ளி இட வேண்டும்.

"பின் வருவன அவையாவன போன்ற தொடர்களுக்குப் பின் முக்காற் புள்ளி இட வேண்டும்.”

முற்றுப் புள்ளி:-

நான் சாப்பிட்டேன். நான் அவனைக் கண்டேன். இவ்வாறு வரும் வாக்கியங்களின் இறுதியில் முற்றுப் புள்ளி இட வேண்டும்.

" வாக்கிய முடிவில் முற்றுப் புள்ளி இட வேண்டும்,"

ஆச்சரியக் குறி :-

ஓட்டைக் குடத்தில் நீர் நிற்கின்றதே! அக்தோ! பாரிபட்டனனா! இவ்வாறு ஆச்சரியம், இரந்கம்; துன்பம் தருஞ்சொற்களின் பின் ஆச்சரியக்குறி இட வேண்டும்.