பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75 புலால் மறுப்பு: புலால் உணவு தொடர்பாக மற்றொரு செய்தியும் நினைவைத் தூண்டுகிறது. சமண சமயத்தவர்கள் புலால் உணவை நினைத்தும் பார்க்க மாட்டார்கள். சமன சமயத்தவராகிய திருபால் என்னும் பெரியார் சமணம் பரப்புபவர்; கோயில்களில் கடவுளின் பேரால் ஆடுமாடு - களைக் கொன்று புசிப்பதை வன்மையாகக் கண்டித்துத் தடுப்பவர். ஊர்ப் பெயர் எனக்கு நினைவில்லை. - ஏதோ ஒர் ஊர்க் காளிகோயிலில் ஆடு மாடுகளை வெட்டிப் பலி யிடுவார்களாம். எருமை மாடுகள் மிகுதியாக வெட்டப் படுமாம். அவ்வூரில் அவ்வாறு பலியிடும் திருவிழா நடக்கும் நாளன்று, திருபால், என்பவர் நம் பாவேந்தரை அழைத்துச் சென்று காட்டினாராம். சிமட்டியால் கட்டப்பட்டிருந்த வாய்க்கால் வழியாக ஆடுமாடுகளின் குருதி விரைவாக ஒடிக்கொண்டிருந்ததாம். இந்தக் கொடுமையைக் கண்ட தும் பாவேந்தரின் மனம் மாறிவிட்டதாம். இனிப் புலால் உண்ணுவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டு புதுவை திரும்பினாராம். திங்கள் கணக்கில் வீட்டில் புலால் உணவே கிடையாது; மரக்கறி உணவு மட்டுமே சாப்பிட்டு வந்தாராம். நாள் ஆக ஆகக் கவிஞரின் உடல் சோர்ந்து விட்டதாம்; கை கால்கள் வழக்கமான வலுவை இழந்தனவாம்; மாடிகூட ஏற முடியவில்லையாம். மருத்துவரிடம் சென்று உடல் நிலையைக் கூறினாராம். கேட்ட மருத்துவர், அண்மையில் உங்கள் வாழ்க்கை யில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டதுண்டா? என்று வினவி னாராம். புலால் உணவையே மிகுதியாக விரும்பி உண்டு