பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

| 10 ஏறத rழப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் மாலை 4 மணிக்குச் சென்னை - பக்கிங்காம் கால் வாயில் தோணி ஏறி, மறுநாள் காலை 9 மணிக்கு மாவலி புரம் சேர்ந்தோம் நானும் என் தோழர் பலரும். வழிப் போக்கின் இடைநேரம் இனிமையாய்க் கழிந்தது. எனினும் அப்பெருந் தோணியைக் கரையோரமாக ஒரு கயிறு பற்றி ஒருவன் இழுத்துச் சென்றமையும், மற்றோர் ஆள் பின் புறமாக ஒரு நீளக்கழியால் தள்ளிச் சென்றமையும் இரங்கத் தக்க காட்சி. அதையும் ஆங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதியதாகும் இப்பாட்டு.) 1. சென்னையி லேஒரு வாய்க்கால் - புதுச் சேரி நகர்வரை நீளும், அன்னதில் தோணிகள் ஒடும் - எழில் அன்னம் மிதப்பது போல. என்னருந் தோழரும் நானும் - ஒன்றில் ஏறி அமர்ந்திட்ட பின்பு சென்னையை விட்டது தோணி - பின்பு தீவிரப் பட்டது வேகம், 2. தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள் சென்றிடும் போது விசாலச் சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெய்யில் தூவிடும் பொன்னொளி கண்டோம். நெற்றி வளைத்து முகத்தை - நட்டு நீரினை நோக்கியே நாங்கள் அற்புதம் கண்டு மகிழ்ந்தோம் - புனல் அத்தனையும் ஒளி வானம்.