பக்கம்:இலக்கியத்தில் வேங்கட வேலவன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இலக்கியத்தில் வேங்கட வேலவன்

புதுச்சேரி சமரச சன்மார்க்க சங்கத்தில் 26-11-1987 ஆம் நாள் யான் ஒரு சொற்பொழிவு செய்தேன். அப்போது ஒரு கருத்தை விளக்குவதற்கு எடுத்துக்காட்டாக, திருப்பதி—திருமலையில் இருந்த முருகன் கோயில் பிறகு திருமால் கோயிலாக மாற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறதல்லவா? அதுபோல! என்று கூறினேன்.

சித்தன் வினா

நான் இதைச் சொல்லி முடிப்பதற்குள், எனக்குப் பலமுறை இலவசமாகப் பல் மருத்துவம் செய்தவரும் என்னை கழகப் புலவராகக் கொண்டிருந்த புதுவைக் கல்விக் கழகத்தின் தலைவரும் தமிழ்ப்புலவரும் கவிஞரும் என் அரிய பெரிய நண்பருமாகிய திரு. சித்தன், திருப்பதி முருகன் கோயில் திருமால் கோயிலாக மாற்றப்பட்டது என்பதற்கு ஆதாரம் கூற வேண்டும் என்று கேட்டார். அவர் கேட்டதனால் யான் பின்வரும் ஆதாரத்தைக் கூறினேன்:

பத்தர் கூறியது

யானும் திரு அரங்கநாத-பரம தயாளம் பிள்ளையும் சங்கச் செயற்குழு உறுப்பினர் திரு. கோவிந்தப்-