vi
வகையில், செயல்படுத்தியே ஆக வேண்டும் என்னும் உறுதிப்பாட்டொடு, தீவிரமாகச் சிந்தித்துத் தனித் தனியான தங்கள் மேம்பாடுகளுக்கெனக் கருதிவிடாமல், ஒட்டு மொத்தமான இத் தமிழின முன்னேற்றத்திற்கும் விடுவிப்புக்குமாக என்று எண்ணி, இயங்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்
வாழ்க்கை என்பது வெறும் வளத்தையும் நலத்தையுமே அடிப்படைகளாகக் கொண்டதன்று. அவரவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டிய உரிமைகளையும், மேற்கட்டு விடுவிப்புகளையும், ஒட்டு மொத்தமாள இன முன்னேற்றங்களையும் கூட உள்ளடக்கியதாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துக் கடைப்பிடிக்கத் தக்கதாகும்
ஒரு மரத்தின் கிளைகள் பலவாயிருக்கலாம்; அக்கிளைகளில் தோன்றும் பயன்களும் பலவாயிருக்கலாம்; வேறுபட்டும் இருக்கலாம். அவ்வாறுதான் இருக்கவும் முடியும். ஆனால், அக்கிளைகளையும், அவற்றின், இலை, பூ, காய் பழம் முதலிய பயன்களையும், தனித் தனியாக மதிப்பிட்டுக் கொள்வதுடன் மட்டுமே அமையாமல், அக்கிளைகளையும் அவற்றின் பிற பயன்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் அம்மரத்தின் அடிப்பகுதி, அவை நிலத்தில் வேரூன்றியிருக்கும் தன்மை, அம்மரத்திற்கு இயற்கையாக வந்து வாய்த்திருக்கின்ற வெயிலும் நீரும், எருவும் காப்பும் ஆகிய தன்மைகளையும், அவற்றுக்குச் சொந்தமான செயற்கையாகப் பிறர் ஏற்படுத்திய ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தடைகளையும் தீங்குகளையும் எண்ணிப் பார்த்து, அவற்றிற்கொரு தீர்வு காண்பதே முகாமையானதும் அறிவு நிறைவானதும் ஆகும். இதுவே இன நலத்தின் அடிப்