உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிறந்த மண்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 13

டாலும் உனக்காக அவர் இரண்டொரு நாள் தாமதிப்பா ரென்றே தோன்றுகிறது."

"அதையும்தான் பார்க்கலாமே.”

வெள்ளம் நாளன்றைக்குள் நிச்சயமாக வடிந்துவிடும்." நேற்றுக் களத்துமேடெல்லாம் மூடியிருந்தது. இன்றைக்குக் காலையில் களத்துமேடு தெரிந்துவிட்டதேடா"- என்றாள் அவன் தாய். -.

இலையில் போட்ட இட்டிலிகளைச் சாப்பிட்டுவிட்டு அடுத்த ஈடு எடுப்பதற்காகக் காத்து உட்கார்ந்துகொண் டிருந்தான் அவன். காலியான வாழை இலையைப் பார்த்துக் கொண்டே அடுத் தடுத்துப் பல எண்ணங்களைப் போட்டுக் குழம்பிக் கொண்டிருந்தது அவன் மனம். தாயாருக்குப் பதில் கூறவும் தோன்றவில்லை அவனுக்கு. r

2. அன்பு முள்

மூன்று நாள் கழிந்த பின்பு வெள்ளம் ஒருவாறு வடிந் திருந்தது. டஸ் போக்குவரவு ஒழுங்காக நடைபெறலாம் என்ற நிலைமை ஏற்ப்ட்டிருந்தது. புறப்படுவதற்குத் தயா ராக மூட்டை முடிச்சுகளைக் கட்டி வைத்துவிட்டு அண்டை அயலாரிடம் சொல்லிக் கொள்வதற்காகப் புறப்பட்டான் அழகிய நம்பி. வெள்ளம் வடிந்து சேறும் சகதியும், வழுக்கலு மாக இருந்த தெருவில் காலை வைப்பதற்கே அருவருப்பாக இருந்தது. - -

வீட்டிலிருந்து தெருவிலே இறங்குவதற்கே இவ்வளவு அசிங்கமாக இருக்கிறதே பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எந்த்ெந்த உயர்நிலைகளிலிருந்து எந்தெந்தத் தாழ்வான நிலைகளில் எல்லாம் இறங்கி நடக்க வேண்டியிருக்குமோ?

அவன் தெருவில் இறங்கிச் சேற்றில் கால்களைப் பதித்து. வழுக்கி விடாமல் கவனமாக நடந்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/15&oldid=596634" இலிருந்து மீள்விக்கப்பட்டது