பக்கம்:தமிழ் உரை நடை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரை நடை! 39 என்று வரலாற்று ஆசிரியர்கள் காட்டுகின்ருர்கள். ஒரு காடு மற்ருெரு நாட்டுடன் தொடர்பு கொள்ளவேண்டு மாயின், அது தன்னை ஒத்த வகையில் எல்லாவற்றினும் அமைந்ததாக இருக்க வேண்டும் எனக் காண்பது இயல்பு. தனி மனிதன் நட்பும், நாட்டுக்கு நாடு கொள்ளும் நட்பும் அத்தகைய நிலையில் செல்வதை நாம் இன்றும் காண்கின் ருேம். அந்த கிலேயில் கலேயிலும் வாழ்விலும் இலக்கிய வளனிலும் பல்லாற்ருனும் சிறந்திருந்த, ரோம கிரேக்க காடுகள் அதே நிலையில் பல வகையில் வளமுற்றிருந்த தமிழ் நாட்டோடு தொடர்பு கொண்டிருந்தன என்பதில் வியப்பில்லே அன்ருே யவன நாடெனப் போற்றப்பட்ட அம் மேலைநாடுகளைப் பற்றியும், அங்காட்டவர்கள் தமிழ் காட்டுத் தலே நகரங்களில் தமிழரொடு தமிழராய் வாழ்ந்த கிலே பற்றியும் பல இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நிலையில் மொழி ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களும் இருகாட்டு மொழிகளிலும் உள்ள சில சொற்களின் ஒருமைப் பாட்டை ஆராய்ந்து இந்நாடுகளின் நெடுநாள் உறவை உறுதிப் படுத்துகின்றனர், எனவே, மேலேகாட்டு உரோம கிரேக்க நாடுகளும் தமிழ்நாடும் இன்றைக்கு 2500 ஆண்டு களுக்கு முன்னமே பல வகையில் இணைந்து வாழ்ந்திருந்தன என்பது வரலாறு திட்டமாக வரையறுத்த ஒன்று அன்ருே? இவ் வரலாற்று அடிப்படையில் ஆராய்வோமானல் இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் கிரேக்க ரோம நாடுகளைப் போன்று தமிழ் நாட்டிலும் இலக்கியங்கள் தோன்றி வளர்ந்திருக்க வேண்டும். அக்காலமே பலருடைய ஆய்வின்படி தொல்காப்பியர் காலத்தை ஒட்டிய காலமாகும். தொல்காப்பியர் காலம் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்னது என்பர். அக்காலத்தில் நாட்டில் இலக்கிய இலக்கணங்கள் நன்கு வளர்ந்து இருந்தன. இந்நூலில் பிறிதோரிடத்தில் குறித்தபடி தொல்காப்பியர் காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/48&oldid=874639" இலிருந்து மீள்விக்கப்பட்டது