36 நாடு நலம் பெற நற்றங்கொற்றனார் குறிஞ்சித் திணையில் (நற்-136) அழகாகப்பாடுகிறார். அவர் பாடலுக்கு நான் கொள்ளும் விளக்கம் இதுவேயாகும். 'திருந்து கோல் எல்வளை வேண்டியான் அழவும், அரும்பிணி உறுர்ைக்கு, வேட்டவை வொடாஅடு, மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல, என்னை!- வாழிய! பலவே!-பன்னிய மலைகெழு நாடனொடு நம்மிடைச் சிறிய தலைப்பிரிபு உண்மை அறிவான் போல, நீப்ப நீங்காது, வரின்வரை அமைந்து. தோள்பழி மறைக்கும் உதவிப் போக்குஇல் பொலந்தொடி செlஇயோனே. (நற்-136) என்கின்றார். இவ்வாறு வருமுன் காக்கும் வகையும் அதற்கேற்ற உணவு, உடை பழக்க வழக்கங்களும், நோய் வந்தால் மேற்கொள் ளும் முறைகளும் பலவாகச் சங்க இலக்கியங்களில் பேசப் பெறுகின்றன. நாம் இந்த அளவோடு அமைந்து பிற்காலத்துக்கு வருவோம். சங்ககாலத்தும் அதை ஒட்டியும் வாழ்ந்த மக்கள் இயற்கை வாழ்வும் இயற்கை மருந்தும் கொண்டே தம்மை'நலம் பெறச் செய்து கொண்டனர். என்பதற்கு எத்தனையோ சான்றுகளைக் காட்டலாம். மிளகு, திப்பிலி, சுக்கு, ஏலம் போன்ற இயற்கையில் விளைவன் வெல்லாம் உடல் நோய் போக்குவன போன்றே உயிர் நோய்க்கும் மூன்று. நான்கு ஐந்து வகைப்பட்ட நீதிகளை உள்ளடக்கியும் இந்த மருந்து முறைகளை உட்கருதியுமே 'திரிகடுகம்', 'ஏலாதி' 'சிறுபஞ்சமூலம் என்ற பதினெண் கீழ்க்கணக்கு வரிசையில் மூன்று நூல்கள் தோன்றின.
பக்கம்:நாடு நலம் பெற.pdf/38
Appearance