உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 37

ஆனால் அந்தக் கசப்பு அவனைச் சோர்ந்து நலிய வைப்பதற்குப் பதில் அதிக உறுதியுள்ளவனாக்கியது.

5

மனத்தின் கசப்புக்களை மறந்தவனாக வலது கைப் பக்கம் மிக அருகில் மணல் வெளியைக் கடந்து வெள்ளிப் பணமாக மின்னும் கடலைப் பார்த்தான் முத்துராமலிங்கம். உடனே உற்ச்ாகத்துக்கும் வியப்புக்கும் பஞ்சமில்லாத குழந்தையாக மாறினாற் போலிருந்தது. வேறு பிணிப்புக் களிலிருந்து மனம் தானே கழன்று நீங்கி அந்த அழகில் இலயித்தது. பதிந்தது. கலந்தது. . . . .

கடலையும் மலையையும் பார்க்கும்போது மனம் விசால மடையும் என்று எங்கோ படித்திருந்தது நினைவு வந்தது. தினசரி கடலைப் பார்க்கிற வாய்ப்புப் பெற்றிருந்தும் போலீஸ் அதிகாரி குருசாமிசேர்வைக்கு மனம் ஏன் இப்படிக் குறுகிப் போயிற்று என்று அவனுக்குப் புரியவில்லை.

சுற்றும் முற்றும் தினசரி கண்களில் அழகுகளைப் பொறுத்தவரை அவற்றைக் கவனிக்கவோ, பொருட் படுத்தவோ நேரமின்றி மனிதர்கள் மரத்துப் போகிறார்கள் என்று புரிந்தது. யாருக்கு மரத்துப் போகிறதோ அவர் களால் இயங்க முடியாது. யாருக்கு திகட்டுகிறதோ அவர் களால் எதையும் சுவைக்க முடியாது. இயற்கை அழகு, இரக்கம்,மனிதாபிமானம் இவற்றைப் பொறுத்தவரை அந்த நகரம் முழுவதுமே மரத்துப்போயும், திகட்டிப் போயும் இருப்பதாகப்பட்டது. - . . . . அங்கே எவருக்கும், யாரையும் நின்று கவனிக்க நேர மில்லை. ஏதோ ஒரு போர்க்களத்தில் எதற்கோ விரைவது போல் மனிதர்கள் விரைந்து கொண்டிருந்தார்கள்; அடுத் தவர் கவலைகளையோ, பிரச்னைகளையோ திரும்பிப் பார்க்க அவகாசமோ, அவசியமோ இல்லாத வகையில் அவ்ரவர்களுக்கே போதிய பிரச்னைகளும், கவலைகளும்

நி-3