நா. பார்த்தசாரதி I i இப்போது புரிந்தது. கொள்கை என்ற பெயரிலும், இலட்சி யம் என்ற பெயரிலும் தான் நின்ற இடத்திலிருந்தே தன்னைச்சுற்றி அல்லது தன்னை வளைத்து ஒரு வட்டத் தைப் போட்டுக் கொள்ளாமல் தப்ப முடிவதும் இயலாத் காரியம்தான் என்றாலும் அப்படி வட்டம் போட்டுக் கொண்டு நின்றுவிடுவதன் மூலமே வட்டத்துக்கு வெளியே உள்ள எதுவும் தெரியாமலும், புரியாமலும் போய்விடு கின்றன என்பது சுதர்சனனுடைய அநுபவமாகவே இருந் தது. திருவையாறு நாட்களாக இருந்தால் வாசுதேவனை அவருடைய சாதியைச் சொல்லியே எதிர்த்திருப்பான் அவன். காய்ந்த வைக்கோற்போரில் போகிறபோக்கில் விசி எறியும் நெருப்பு மாதிரி அந்த சாதித் தாக்குதல் பிரயோகம் பற்றிக்கொள்ளும் என்ற இரகசியமும் அவனுக்குத்தெரியும். 'நல்லது செய்கிறவர்களும், தவறு செய்கிறவர்களும் எல்லாச் சாதிகளிலும் இருக்கிறார்கள். வசதியுள்ளவர்களும் ஏழைகளும், எல்லாச் சாதிகள்லும் இருக்கிறார்கள். இரக்க முள்ளவர்களும், இரக்கமில்லாதவர்களும் எல்லாச் சாதி களிலும் இருக்கிறார்கள். இன்றைய உலகில் பொருளாதார அடிப்படையும் ஏற்றத் தாழ்வுகளுமே புதிய சாதியைப் படைக்கின்றன-என்ற பார்வையை அவனுக்குள்ளே வளர்த்த புது நண்பர்களுக்கு இப்போது அவன் நன்றி செலுத்தி மனப்பூர்வமாகப் பாராட்டிக் கொண்டிருந்தான், ஆசிரியர்களின் ஓய்வு அறையிலிருந்து தலைமையாசிரி யருக்குப் பதிலாக அவர் பாடம் நடத்தவேண்டிய ஆறாவது ஃபாரம் "ஏ" பிரிவு வகுப்புக்குப் போவதற்காக நடந்து கொண்டே சுதர்சனன் இவ்வளவும் நினைத்தான். . பாடவேளைகளுக்கு நடுவே கிடைக்கும் வீஷர் 'பீரியடை' எப்படி எத்ற்காகப் பயன்படுத்தப்பட வேண் டும் என்று தலைமையாசிரியர் வாசுதேவன் தனக்கு அறி வுரை கூறியதையும், எச்சரித்ததையும், நினைத்தபோது சுதர்சனன் உள்ளுறச் சிரித்துக் கொண்டான். ; . . . . . . جو
பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/13
Appearance